தேனி மாவட்ட அணைகளின் நிலவரம்
தென்மேற்கு பருவ மழை இந்தாண்டு குறைவால் 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணை உட்பட தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அனைகளிலும் நீர் வரத்து குறைந்துள்ளது.
மேற்கு தொடர்சி மலைகள் அமைந்துள்ள மாவட்டமான தேனி மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சலாறு அணை, சண்முகா நதி அணை, சோத்துப்பாறை அணை, முல்லை பெரியாறு அணை ஆகியவை அமைந்துள்ளது. முல்லைபெரியாறு அணையானது ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை என 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்குவது விளங்குகிறது.
முல்லை பெரியாறு அணையிலிருந்து வரும் நீரானது வைகை அணையில் தேக்கப்பட்டு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வைகை அணைக்கு வரும் நீரானது முல்லை பெரியாறு அணையிலிருந்து மட்டுமல்லாமல் சோத்துப்பாறை அணை, மஞ்சலாறு அணையிலிருந்து தேக்கிவைக்கப்பட்டு இரு அணைகளின் மூலம் திறந்துவிடப்படும் தண்ணீர் வைகை அணையை சென்றடையும். கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் பெய்யும் மழையானது சோத்துப்பாறை அணை, மஞ்சலாறு அணை இரண்டு அணைகளில் தேக்கப்படும் தண்ணீர் வைகை அணைக்கும் திறந்துவிடப்படும்.
தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வருடந்தோறும் பெய்யும் தென் மேற்கு பருவமழை குறைவால் வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சலாறு அணையில் நீர் வரத்து குறைந்து வருகிறது. வைகை அணை, கேரளா மாநிலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பருவமழை குறைவால் முல்லை பெரியாறு அணையில் நீர் வரத்தும் நீர் இருப்பும் குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதத்தை ஒப்பிடும்போது தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது.
தேனி மாவட்ட அணைகளின் நிலவரம்:
வைகை அணை,
நிர்மட்டம் - 65.81 (71 அடி), நீர் இருப்பு – 4810 மி.க.அடி, நீர் வரத்து – 655 கனஅடி, நீர் திறப்பு –1199க.அடி
முல்லை பெரியாறு அணை,
நிர்மட்டம் - 133.20 (142 அடி), நீர் வரத்து –633 கனஅடி, நீர் திறப்பு – 1300 கனஅடி
மஞ்சலார் அணை,
நீர்மட்டம் - 55.0 (57 அடி) ,நீர் இருப்பு – 435.32 மி.கனஅடி , நீர் வரத்து – 0 , நீர் திறப்பு – 0
சோத்துப்பாறை அணை,
நிர்மட்டம் - 120.21 (12.28 அடி) , நீர் இருப்பு – 90.04 மி.கனஅடி ,நீர் வரத்து –4 கனஅடி, நீர் திறப்பு – 3 கனஅடி
சண்முகா நதி அணை,
நீர்மட்டம் - 38.90 (52.55 அடி) ,நீர் இருப்பு – 41.63 மி.க.அடி, நீர் வரத்து – 0 கனஅடி , நீர் திறப்பு – 0 கனஅடி
”சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா”இந்தப் பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. பாடலுக்கு சொந்தமானவர் இந்தப் பாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை; இந்த ஊருக்கும் சொந்தமானவர். இசைஞானி இளையராஜாவின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம்தான் அது.
தெரிந்துகொள்ள
Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!





















