மேலும் அறிய
Advertisement
Southern Railway: ரயில் பாதை மின்தட பராமரிப்பு பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றம்! தெரிஞ்சிக்கோங்க
தீபாவளி நாள் தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது, எனவும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன இது குறித்து ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு தகவல் இங்கே.
ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
Southern Railway - திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின் தடம் மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்செந்தூரில் இருந்து மாலை 04.25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் - திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயில் (06676) அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
தீபாவளி நாள் தவிர மற்ற நாட்களில் ரத்து செய்யப்படுகிறது
பாலக்காடு - திருச்செந்தூர் முன்பதிவிலாத ரயில் (16731) அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் தாழையூத்து - திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூர் - பாலக்காடு முன்பதிவில்லாத ரயில் (16732) அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.45 மணிக்கு 85 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும். அக்டோபர் 15, நவம்பர் 17, 20, 21, 22 ஆகிய நாட்களில் திருநெல்வேலி - செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில் (06687) திருநெல்வேலியில் இருந்து மதியம் 01.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 02.40 மணிக்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime: ரூ.2000 கொடுத்தால் போலி ஆதார் ! - சிவகங்கையில் பெண் ஏஜெண்டுகள் மூலம் சட்ட விரோதமா ?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion