விரைவில் இபிஎஸ்- ஒபிஎஸ் ஒற்றுமையாக வந்துவிடுவார்கள் - வி.பி.துரைசாமி பேட்டி !
"செங்கோலை தமிழக சட்டமன்றத்தில் வைப்பது குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார்" வி.பி.துரைசாமி பேட்டி.
ஈபிஎஸ் ஒபிஎஸ் ஒற்மையாக வந்துவிடுவார்கள்- ஆட்சியை பிடித்து தமிழக சட்டமன்றத்தில் செங்கோல் வைப்பது குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார் - என தமிழக பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி
மதுரை காந்தி மியூசியம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பா.ஜ.க., மாநில துணைத் தலைவர் வி.பி.துரைச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்...,” 224 ஏக்கரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இந்தியாவில் உள்ள பெரிய மருத்துவமனை. மருத்துவமனை கட்டிட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதில் எந்த அரசியல் பாகுபாடும் இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கி விட்டன. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக பாஜக சார்பில் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பாக தான் இருக்கிறோம். ஆனால் கர்நாடக தேர்தல் வாக்குறுதியில் மேகதாது அணை கட்டுவோம் என வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டது பாஜகவிற்கு வருத்தம்.
தமிழக விவசாயிகளின் நிலையை எண்ணிப்பார்க்கமால் அவர் கர்நாடக காங்கிரஸ் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். நூற்றாண்டு கால பிரச்னை காவிரி பிரச்னை. மேகதாது அணை கட்டினால் கபினிக்கும், காவிரிக்கும் தண்ணீர் வராது, தமிழகத்திற்கு தண்ணீர் வராது. தமிழகம் வறண்டு விடும். தமிழக விவசாயகளின் உரிமையை, நன்மையை, அவர்களின் மேம்பாட்டுக்கான உரிமையை பெற்றுத்தர அண்ணாமலை நடவடிக்கை எடுப்பார். மல்யுத்த வீரர்கள் கொடுத்த புகாரில் உரிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் காவல்துறை உள்ளது. ஆனால் வீராங்கனைகள், வீரர்கள் கட்டளை பிறப்பிக்கிறார்கள். குற்றவாளிகளுக்கு சாதமாகவோ அனுசரணையாகவோ பாஜக ஆதரவாக செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. முதல்வர் வெளிநாடு சென்றதில் பாஜகவுக்கு பொறாமை இல்லை, மகிழ்ச்சிதான். ஆனால் என்ன முதலீடுகளை ஈர்த்தார், எவ்வளவு வேலைவாய்ப்பு என்பதை தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் முதல்வரின் பயணம் வெற்றியா தோல்வியா என்பது தெரியும்.
ஈபிஎஸ் ஓபிஎஸ் மாறி மாறி பெரிய மாநாடுகளை நடத்துகிறார்களே என்ற கேள்விக்கு,
பாஜக பிற கட்சி விஷயங்களில் தலையிடுவதில்லை. அதிமுக எங்களுக்கு கூட்டாளியாக உள்ளனர். விரைவில் இபிஎஸ்- ஒபிஎஸ் ஒற்றுமையாக வந்துவிடுவார்கள். செங்கோல் நல்லாட்சியின் அடையாளம். 2026ல் புதிய ஆட்சி அண்ணாமலை தலைமையில் மலரும். அப்போது செங்கோலை தமிழக சட்டமன்றத்தில் வைப்பது குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார் என பேசினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - MS Dhoni: இதனால் ஓய்வை அறிவிக்கப்போகிறாரா தோனி? மருத்துவமனையில் சிகிச்சையா? வெளியான பரபரப்பு தகவல்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்