மேலும் அறிய
Advertisement
மழையில் பிரேக் அடித்ததால் கவிழ்ந்த பஸ்... சிவகங்கை அருகே அரசு பேருந்தில் உயிர் தப்பிய பயணிகள்!
ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகளுக்கு பெரிய காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சோழபுரம் அருகில் திருப்பத்தூரில் இருந்து சென்ற, அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பயணிகள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சோழபுரம் பகுதியில் தஞ்சாவூர் - மானாமதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக திருப்பத்தூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பேருந்து சென்று வருவது வழக்கும். இந்நிலையில் அரசுப் பேருந்து ஒன்றை அரசு ஓட்டுநர் பிரகாஷ் என்பவர், ஓட்டி வந்தார். அப்பொழுது பரவலாக மழை பெய்து சாலையில் ஈரமாக இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சோழபுரம் அருகே கவிழ்ந்தது. இதனால் பெரும் விபத்து ஏற்பட்டது. அப்பொழுது திடீரென சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் பேருந்தில் பயணித்த 29 பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகளுக்கு பெரிய காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை சற்று கவனிக்கவும் -Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இது ஓட்டுநர் பிரகாஷ் நம்மிடம்...," பேருந்து வந்து கொண்டிருக்கும் போது, எதிரே லாரி வரவும் திருப்பினேன், அப்போது ஸ்டேரிங் ஸ்டக்காகிவிட்டது. மழை நேரத்தில் பிரேக் பிடிக்கவும் வயல் பகுதியில் பஸ் மெதுவாக சாய்ந்தது. சரியான நேரத்தில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்" என்றார்.
பேருந்து பயணிகள் சிலர்...," ஓட்டுநரின் சாமத்தியத்தால் அனைவரும் உயிர் தப்பினோம். வயல் பகுதியில் பேருந்தை திருப்பவில்லை என்றால் லாரியில் மோதி இருக்கும். மழை நேரம் என்பதால் பிரேக் கூட சரியாக நிற்கவில்லை. பேருந்தில் பயணித்த சிலருக்கு மட்டும் காயங்கள் ஏற்பட்டது, மற்றபடி அனைவரும் நலமாக உள்ளோம்" என்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் சூரசம்ஹார பெருவிழா...
— ABP Nadu (@abpnadu) November 9, 2021
இன்று மாலை 4.30 மணி முதல் தொடர் நேரலை...
Live Link : https://t.co/X4pQkgLeyh#சூரசம்ஹாரம் #soorasamharam2021 pic.twitter.com/du7bB3wAhs
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion