மேலும் அறிய

காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறிவிட்டனர்.. கம்யூனிஸ்ட் குறித்து சீமான் தாக்கு !

சி.பி.எம் 90 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி, பெற்று எதிர்க்கட்சியாக செயல்பட்ட நிலையில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று குறுகி நிற்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி விட்டது என மதுரையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்தார்.
 

வழக்கில் உடன்பாடு எட்டத்தேவையில்லை

 
மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது. என் மீது பதியப்பட்டுள்ள வழக்கு ஆதாரமில்லாத அவதூறான வழக்கு. 15 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் ஆதாரமற்ற வழக்கை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். எப்படி இவ்வழக்கு விசாரித்தாலும் அவதூறு வழக்காகத்தான் தெரியவரும். இவ்வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். இவ்வழக்கில் உடன்பாடு செய்ய வாய்ப்புமில்லை. அப்படி உடன்பாடு ஏற்பட தேவையுமில்லை.
 

நீதிமன்றம் சொல்லாதபோது என்னை பாலியல் குற்றவாளி என்கிறார்

திருமணம் செய்யக்கூடாது என்பது பெரியாரின் கோட்பாடு.  Enjoyment with out Responsibility என பெரியார் கூறினார். ஆனால், எனக்கு எதிராக பெரியார் பக்தர்கள் பேசுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளது. இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த பொதுப் பிரச்னைக்கு போராடி வருகிறது. தமிழகத்தில் நடைபெறக்கூடிய பாலியல் வன்கொடுமைகளுக்கு குரல் கொடுக்கவில்லை. பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்.
 

6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று குறுகி நிற்கிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் போராட அனுமதிக்காத அரசும் இதில் குற்றவாளியாக தானே உள்ளது. இதில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜீவானந்தத்துடன் செத்துப் போய்விட்டது. சங்கரய்யாவுடன் முடிந்து போய் விட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் வாழும் மனித புனித தலைவர் அய்யா நல்லக்கண்ணு மட்டுமே உள்ளார். நல்லக்கண்ணுக்கு ஏன் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடவில்லை. சிபிஎம் 90 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி, பெற்று எதிர்கட்சியாக செயல்பட்ட நிலையில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று குறுகி நிற்கிறது.
 

தமிழகத்தில் ஒரு லட்சம் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது

 
இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சி, போராட்டங்களை எல்லாம் வறட்சியாக்கிவிட்டது. இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மார்க்கிஸியம் இருக்கு, மார்க்கிஸிய தலைவர்கள் எங்கே?, தமிழகத்தில் மார்க்கிஸ்ட் தலைவர்களை பிடிக்காமல் இல்லை. தலைவர்களிடம் செயல்பாடுகள் எங்கே?, என்னை அவப்பெயரை ஏற்படுத்தி இழிவு படுத்த வேண்டுமென செயல்படுகின்றனர். நடிகை விஜயலட்சுமி என்னை மட்டுமல்லாமல் எனது தாய், மனைவி குறித்தும் பேசுகிறார். இவ்வழக்கில் 15 ஆண்டுகளாக அமைதி காத்தேன். இவ்விவாகரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதால் நீதிமன்றத்தை நாடி உள்ளேன். தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது என முதலமைச்சர் கூறியுள்ளார், அப்படி என்றால் தமிழகத்தில் ஒரு லட்சம் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது தானே?" என கூறினார்.
 
 
 

தலைப்பு செய்திகள்

மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget