4 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன மாணவனை தேடி ஏக்கத்துடன் காத்திருக்கும் தந்தை...!
விக்னேஷ்வரன் குறித்த விபரங்களை முகநூல் நிறுவனத்திடம் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் சிபிசிஐடி போலீசார் வழங்கி விசாரணையை முடுக்கி விட்டனர்.
மாயமான மாணவர் முகநூலில் வந்தாரா..? சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை.!
நான்கு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை கண்டுபிடிக்க நீதிமன்றத்தை நாடிய தந்தை.!
நீதிமன்ற உத்தரவையடுத்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன பிளஸ் 2 மாணவரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் ஆசாரி தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் விக்னேஷ்வரன், 17. இவர் அங்குள்ள பள்ளியில் கடந்த 2017ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்தபோது திடீரென காணாமல் போய் மாயமானார். இதனையடுத்து, மாணவரின் தந்தை நடராஜன் சொந்த ஊரான அபிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குபதிந்து தேடி வந்தனர்.
விசாரணையில், தன்னுடன் படித்த மாணவி ஒருவரை கேலி செய்ததாகவும், அந்தப்பெண்ணின் உறவினர்கள் மிரட்டல் விடுத்ததாகவும், விக்னேஷ்வரன் மிரட்டல் விடுத்த மாணவியின் பெற்றோருக்கு பயந்து போய் ஊரை விட்டு ஓடிப்போயிருக்கலாம் எனவும் உள்ளூர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நாங்கள் அவரை தேடி பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் விக்னேஷ்வரன் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தன் மகனின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாணவரின் தந்தை நடராஜன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மாணவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்படி தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் விக்னேஷ்வரன் கிடைக்காதது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில், 'மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை' என போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து விக்னேஷ்வரன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டனர்.
இதன் அடிப்படையில், விக்னேஷ்வரன் குறித்த தகவல்களை சேகரித்து ராமநாதபுரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விக்னேஷ்வரன் டெல்லியில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சிபிசிஐடி போலீசார் டில்லி சென்று விசாரித்தனர். தற்போது 21 வயது கடந்த நிலையில், திடீரென ஒருநாள் விக்னேஸ்வரனின் முகநூல் பக்கத்தில் அவரின் பதிவு வந்ததாகவும் மேலும், சமூக வலைதளங்களில் தொடர்பில் உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, விக்னேஷ்வரன் குறித்த விபரங்களை முகநூல் நிறுவனத்திடம் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் சிபிசிஐடி போலீசார் வழங்கி விசாரணையை முடுக்கி விட்டனர். கூகுள் நிறுவனத்தில் தகவல் தெரிவித்து சமூக வலைதளங்களில் விக்னேஸ்வரன் தொடர்பில் உள்ளாரா என தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
சொந்த ஊரான அபிராமத்தில் விக்னேஷ்வரன் ஏற்கனவே இருந்தபோது பயன்படுத்திய சமூக வலைதள தொடர்பு விபரங்கள் அடிப்படையிலும் விசாரித்து வருகின்றனர். பெற்ற மகன் இருக்கிறானா இல்லையா எங்கே இருக்கிறான் என்ற தகவல் தெரியாமல் ஒருபுறம் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். மறுபுறம் சட்டம் ஒழுங்கு காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியாத ஒரு வழக்கை தங்கள் வசம் ஒப்படைத்த நீதிமன்றத்தின் உத்தரவுக்காக நாலாபுறமும் விக்னேஸ்வரன் குறித்து ராமநாதபுரம் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.