மேலும் அறிய
Advertisement
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: நாளை விசாரணை
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை - தந்தை மகனை தொடர்ச்சியாக காவலர்கள் கொடுமையாக தாக்கியதாக தலைமை காவலர் சாட்சியம் - நாளை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைப்பு.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சி.பி.ஐ., தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
@abpnadu | சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை - தந்தை மகனை தொடர்ச்சியாக காவலர்கள் கொடுமையாக தாக்கியதாக தலைமை காவலர் சாட்சியம் - செப்டம்பர் 23ஆம் தேதிக்கு அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைப்பு.#madurai | @SRajaJourno | @sathankulam_ pic.twitter.com/rkI3LNE2gs
— arunchinna (@arunreporter92) September 21, 2022
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு மின்னணு ஏல முறை மூலம் ரூபாய் 13.40 கோடி வருமானம் இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -
வழக்கில் சாட்சிய விசாரணை தொடங்கியபோது தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நேரில் ஆஜராகி தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சம்பவத்தின் போது பணியில் இருந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் சேர்ந்து தொடர்ச்சியாக தாக்கி உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுத்தியதாகவும் , காவலர்கள் தந்தை ஜெயராஜை அடித்தபோது அவர் தனக்கு சுகர் மற்றும் பிரசர் இருக்கிறது என்று சொல்லி இதற்கு மேலும் தன்னை அடிக்க வேண்டாம் என்று கூறியதாகவும், மகன் பென்னிக்ஸ் காவலர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அப்போது காவலர்கள் அடிப்பதை நிறுத்தியதை பார்த்த ஆய்வாளர் ஸ்ரீதர் தொடர்ந்து காவலர்களைத் மீண்டும் அடிக்க சொன்னதாகவும் சாட்சியம் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை 23 ஆம் தேதிக்கு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion