மேலும் அறிய
Advertisement
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு மின்னணு ஏல முறை மூலம் ரூபாய் 13.40 கோடி வருமானம்
மொத்தமாக தெற்கு ரயில்வே அளவில் இந்த மின்னணு ஏல முறையில் 151 ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 82.80 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
ரயில் நிலையங்களில் வாகன காப்பகங்கள் பராமரிப்பு, விளம்பரங்கள் செய்வது, கழிப்பறை பராமரிப்பு, தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் அமைப்பது, ரயில்களில் பார்சல் போக்குவரத்து போன்ற சேவைகளுக்கு ரயில்வே வர்த்தக பிரிவு ஒப்பந்ததாரர்களை நியமித்து வருகிறது. நேர்மையான வெளிப்படை தன்மையுடன் ஒப்பந்தங்களை கையாள தற்போது ரயில்வேயில் மின்னணு ஏலம் நடைமுறைக்கு வந்துள்ளது.
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு மின்னணு ஏல முறை மூலம் ரூபாய் 13.40 கோடி வருமானம் கிடைத்துள்ளது.@drmmadurai | @city_madurai | @UpdatesMadurai | @AviationMadurai
— arunchinna (@arunreporter92) September 20, 2022
இதற்காக ஒப்பந்ததாரர்கள் www.ireps.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்து ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த இணையதள வாயிலாக என்னென்ன ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன என்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். மதுரை கோட்டத்தில் மேற்கண்ட சேவைகளுக்கு ஒப்பந்தங்கள் மின்னணு ஏல முறையில் கோரப்பட்டிருந்தது. இதில் 12 வாகன காப்பக ஒப்பந்தங்கள், 30 விளம்பர ஒப்பந்தங்கள், 3 ரயில்களில் பார்சல் போக்குவரத்திற்காக ஒப்பந்ததாரர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரத்தில் தொடர்ந்து நின்று செல்லும் ” - ரயில்வே நிர்வாகம்
இதன் மூலம் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு ரூபாய் 13.40 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மொத்தமாக தெற்கு ரயில்வே அளவில் இந்த மின்னணு ஏல முறையில் 151 ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 82.80 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மின்னணு ஏல முறையில் எளிதான, விரைவான சேவை கிடைக்கிறது. முன்வைப்புத் தொகை செலுத்துவது, ஒப்பந்த ஆணை வழங்குவது போன்றவை விரைவாக இணையதளம் மூலமாக நடைபெறுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion