ராமேஸ்வரம் - ஹுப்ளி ரயில் சேவை நீடிப்பு ; பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்குகிறது !
ராமேஸ்வரம் - ஹுப்ளி ரயில் சேவை நீடிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்கும்.
ராமேஸ்வரம் - ஹுப்ளி ரயில் சேவை
சிறப்பு தினம் என்றாலே வெளியூரில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி விடுவார்கள். அதன் காரணமாக, சிறப்பு தினங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதன் காரணமாக பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றே சொல்லலாம். இதன் காரணமாக, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கூடுதல் பேருந்துகளை இயக்க, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துவருகிறது. ரயில்களிலும் தொடர்ந்து விடுமுறை நாட்களிலேயே கூட்டம் அதிகளவும் ஏற்படும். இந்நிலையில் ராமேஸ்வரம் - ஹுப்ளி ரயில் சேவை நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் சேவை மீண்டும் நீட்டிப்பு
Hubballi Rameswaram - Hubballi Weekly Specials: பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - ஹுப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை ஜூலை மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் ஆறு மாதங்களுக்கு டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும் ஹுப்பாளி - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (07355) ஜூலை 6 முதல் டிசம்பர் 28 வரை இயக்கப்படும்.
ரயில் பயணச்சீட்டு முன்பதிவு
மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹுப்ளி சென்று சேரும் ராமேஸ்வரம் - ஹுப்ளி வாராந்திர எக்ஸ்பிரஸ் (07356) ஜூன் 7 முதல் டிசம்பர் 29 வரை இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்கும்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Paris Olympics 2024: போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - CM Stalin: "ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!