மேலும் அறிய

Ponmanickavel :”வயிறு எரியது! கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்களை புணரமைப்பு அல்லது புதுப்பித்தல் என்பதை இந்து சமயஅறநிலையத்துறை செய்தால் அது குற்றம் - தொல்லியல் துறையே அதனை மேற்கொள்ள வேண்டும் - பொன் மாணிக்கவேல் பேட்டி

திண்டுக்கல் மாவட்டம் அபிராமி அம்மன் கோயிலை ஆய்வு செய்த பின்பு முன்னாள் சிலை கடத்தல் பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் பின் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது" திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நேற்று ஒரு குற்றம் நடந்துள்ளது என தெரிவித்தார். அதுவும், கைது செய்யக்கூடிய அளவிலான குற்றம் என தெரிவித்திருந்தனர். மதுரையில் இருந்து இதனால் தான் திண்டுக்கல் வந்துள்ளேன். தற்போது, பட்டுக்கோட்டை செல்ல உள்ளேன். பட்டுக்கோட்டையில் கைது செய்யக்கூடிய அளவிலான குற்றம் குறித்து 90 நாள் முன்பு அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

"அராஜக அரசாங்கம்"

ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. குற்றம் குறித்து கண்டறியப்பட்டால் உடனடியாக நீதிமன்றத்திற்கு அந்த வழக்கை கொண்டு செல்ல வேண்டியது அரசுதான். அவ்வாறு கொண்டு சேர்க்கவில்லை என்றால் அதனை அரசாங்கம் என்று கூற மாட்டார்கள். அராஜக அரசாங்கம் என்றுதான் சொல்ல வேண்டும். Breakdown of law and order என்ற சொல் அரசாங்கத்தை களைக்கும் அளவிற்கான சக்தி படைத்தது.

Ponmanickavel :”வயிறு எரியது!  கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்

அபிராமி அம்மன் கோயிலில் குற்றம் நடந்து இருப்பதாக தெரிவித்தனர். நூறு வருடங்களைக் கடந்த கோயில்களை புராதான கோயில்கள் எனக் கூறுவார்கள். நூறு வருடத்திற்கு உள்ளே உள்ள கோயில்களை பழமையான கோயில்கள் என தெரிவிப்பார்கள். அபிராமி அம்மன் கோயிலில் 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில்களில் திருப்பணி என்பது வேறு, புனரமைப்பது என்பது வேறு, புதுப்பித்தல் என்பது வேறு. இந்து அறநிலையத்துறை புதுப்பித்தல் என்ற பெயரை உபயோகம் செய்கிறது. இது தவறான வார்த்தை, புனரமைப்பது என்பதே சரியான சொல்.

தொல்லியல் துறைக்கு தான் அனுமதி:

அதனை அறநிலையத்துறை மேற்கொள்ளலாமா? என்பதை நீங்கள் தான் கேட்க வேண்டும். 100 முதல் 400 வருடங்கள் பழமையான கோயில்களை இந்து அறநிலையத்துறை புனரமைப்பு செய்யலாமா என்றால் அந்த அருகதையே அவர்களுக்கு கிடையாது. அவ்வாறு இந்து அறநிலையத்துறை புனரவைப்பு செய்தால் அது கைது செய்யும் குற்றம் அல்ல. ஆனால் விசாரணை செய்யும் பொழுது அவர்களை கைது செய்யலாம்.புனரமைப்பு என்பதை இந்திய அரசாங்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைக்கு அதிகாரம் உள்ளது.

Ponmanickavel :”வயிறு எரியது!  கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்

”ஊழல் தான் காரணம்”:

நூறு வருடத்திற்கு மேல் உள்ள கோயில்களை புதுப்பித்தல் என்பது குற்றம். நூறு வருடத்திற்கு கீழே உள்ள கோயில்களை புதுப்பித்துக் கொள்ளலாம். கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளும் பொழுது கோடிக்கணக்கான பணம் அதில் கிடைக்கிறது. இதனால் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு 20% ஒப்பந்ததாரருக்கு 20% என அனைவரும் சேர்ந்து 60% சாப்பிட்டு விடுகின்றனர்.

இதையும் படிங்க: Madurai : ஒரு கோடி இலக்கு.. மரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொறியாளார்.. மதுரையில் மியாவாக்கி காடுகள்

தொல்லியல் துறை செய்ய வேண்டிய வேலைகளை இந்து அறநிலையத்துறை எங்களுக்கு தனியாக தொல்லியல் சம்பந்தமாக ஆய்வு செய்ய குழு உள்ளது என தெரிவித்து இந்த வேலைகளை சட்டத்திற்கு புறம்பாக செய்கின்றனர்.  இதற்கு காரணம் ஊழல். எங்கு பார்த்தாலும் ஊழல்.கோயில் நிதியை எடுத்து ஊழல் செய்வதை நினைத்தால் வயிறு எரிகிறது.1124 வருடம் பழமையான தஞ்சையில் உள்ள புள்ள மங்கை என்ற கோயிலில் வேலை செய்யும் அர்ச்சகருக்கு மாதம் ரூபாய் 300 சம்பளம் என தெரிவிக்கின்றனர்.

Ponmanickavel :”வயிறு எரியது!  கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்

உச்சக்கட்ட அநியாயம் இதுகுறித்து கேட்டால் தட்டில் பணம் கிடைக்கிறது என கூறுகின்றனர். இந்து அறநிலையத்துறை என்பது ஆங்கிலேயரை விட கேவலமான நபராக உள்ளனர். ஏனென்றால் ஆங்கிலேயர் மக்களை  இரண்டாக பிரித்து ஆண்டு வந்தனர்.  அதேபோல் இந்து அறநிலைத்துறையும் இரண்டாக பிரிக்கின்றனர்.

இதையும் படிங்க: Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!

கோயிலில் உள்ளே வேலை செய்பவர்கள் முதல் கட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் என கூற வேண்டும் ,அதற்கு அடுத்தபடியாக அமைச்சர் முதற்கொண்டு இரண்டாம் நிலை அதிகாரியாகவே கூற வேண்டும். திண்டுக்கல்லில் உள்ள அபிராமி அம்மன் கோயிலை புனரமைப்பு செய்யவில்லை, புதுப்பித்தல் செய்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கோயிலை நவீன கோயிலாக மாற்றி உள்ளனர், இந்த கோயிலுக்கு வண்ணம் கூட அடிக்க கூடாது. தஞ்சை பெரிய கோயில் உள்ள நிறத்தில் தான் அடிக்க வேண்டும்.

மாறியுள்ள தூண்கள்:

கோயிலின் அறங்காவலர் இடம் கோயிலில் உள்ள அனைத்து சொத்துக்கள் உட்பட கோயில் தூண்களையும் அவர்களிடம் நாம் கொடுத்து வைக்கிறோம். இந்த கோயில்களின் தூண்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கோயில்களின் தூண்களை மாற்றியமைத்தால் அதன் பெயர் கையாடல். மேலும் அவர் நம்பிக்கை மோசடி செய்துள்ளார் இதுதான் முக்கியமாக கவனிக்க வேண்டிய குற்றம்.

இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வழங்க முடியும். இது இன்று நடைபெறவில்லை என்றாலும் சட்ட ரீதியாக நீதிமன்றம் சென்று கண்டிப்பாக நடத்துவோம். தமிழ்நாடு அரசை குறை சொல்வதோ, இந்து அறநிலையத் துறையை போட்டு தள்ளுவதோ எங்களது நோக்கம் இல்லை. ஆனால் இந்துக் கோயில்களுக்கு எதிராக வரும்போது அவர்களை எதிர்க்க தயங்க மாட்டோம்.

Ponmanickavel :”வயிறு எரியது!  கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்

கோவில் இடத்தில் இந்து அறநிலையத்துறை அலுவலகம் வைத்திருந்தால் வாடகை கொடுக்க வேண்டும். இந்து அறநிலையத்துறை கோயில்களில் வேலை பார்ப்பவர்கள் ஆயிரக்கணக்கில் சம்பளங்கள் பெரும்பொழுது அர்ச்சகருக்கு மாதம் 300 ரூபாய் வழங்குவது எவ்வாறு சரியானதாக இருக்கும். இதற்கு ஒரு ஆணையர் ஒரு அமைச்சர் தேவையில்லை. திண்டுக்கல்லில் உள்ள சைவ வைணவர்கள் நீங்கள் அவமானத்தில் உங்கள் தலையை தொங்க போட வேண்டும். திண்டுக்கல்லில் உள்ள எல்லா வைணவர்களும் இந்துக்களும் உண்மையான தெய்வம் மலை மேல் செல்ல இயலவில்லையோ என்று தங்கள் தலையை தொங்க விட வேண்டும். கோயில் தூண்கள் திருடப்பட்டுள்ளது. 

அதனை செய்த அதிகாரிகளோ தொழிலதிபர்களோ யாராக இருந்தாலும் அவர் மீது வழக்கு தொடுக்கப்படும்.  வழக்கு என்பது தவறு நீதிமன்றத்திற்கு இதை கொண்டு செல்வோம். வெளிநாடுகளில் இருந்து சிலை தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் என கூறுவார்கள் ஆனால் கொண்டுவரப்பட்டதா என்றால் இது தற்போது வரை இல்லை. நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழக அரசு என் மீது வழக்கு பதிவு செய்ய வில்லை. வழக்குப்பதிவு செய்வது செய்யாதது காவல்துறையின் சுதந்திரம் அவர்களை வழக்கு பதிவு செய்ய வைப்பது எங்களது கடமை" என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு
WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு
Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு
WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு
Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்
Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்
Simmam New Year Rasi Palan: சிம்மத்துக்கு ஜாக்பாட்! 2025 வருஷம் உங்களுக்கு இப்படித்தான் இருக்கும்!
Simmam New Year Rasi Palan: சிம்மத்துக்கு ஜாக்பாட்! 2025 வருஷம் உங்களுக்கு இப்படித்தான் இருக்கும்!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
Breaking News LIVE: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆட்சிககு வர விரும்புகிறது - திருமாவளவன்
Breaking News LIVE: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆட்சிககு வர விரும்புகிறது - திருமாவளவன்
Embed widget