மேலும் அறிய

சிவகங்கை : பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்கு எச்சம் கண்டெடுப்பு..

அரசனேரி கீழமேடு பேச்சி குளம் கண்மாய் பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்கு எச்சம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் பேச்சிகுளம் கண்மாய் பகுதியில் வித்தியாசமான கற்கள் கிடைத்ததன் பெயரில் அவ்விடத்திற்கு சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, தலைவர் நா. சுந்தரராஜன் செயலர் நரசிம்மன் மற்றும் சேதுபதி,பிரவீன்,கார்த்தி,  கா. சரவணன்  ஆகியோர் அவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்கு எச்சம் கிடைத்துள்ளது.

சிவகங்கை : பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்கு எச்சம் கண்டெடுப்பு..
இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா பின்வருவனவற்றை தெரிவித்துள்ளார்.
 
இரும்பு உருக்கு ஆலை.
   
பெருங்கற்காலத்தில் இரும்பை உருக்கும் அறிவை தமிழர்கள் பெற்றிருந்தனர். ஒவ்வொரு சிற்றூர் பகுதிகளிலும் தமக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய இயற்கை சார்ந்த சூழலை அன்றைய மக்கள் பெற்றிருந்ததாக கருதமுடிகிறது தமக்கு தேவையான பானைகளை வனைந்து கொள்ளுதல் மர வேலைகளை செய்து கொள்ளுதல் போன்றவற்றைக் காண முடிகின்றன. அதைப்போல இரும்பு உருக்கும் தொழில்நுட்பத்தையும் தமிழ்நாடு முழுமையாக பெருங்கற்காலத்தில் பரவலாக மக்கள் பயன்படுத்தியவை ஆய்வுகளால் தென்படுகின்றன. 

சிவகங்கை : பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்கு எச்சம் கண்டெடுப்பு..
வட்ட வடிவ உலைகள்.
 
 தரையோடு ஒட்டியதாக வட்டவடிவிலான உலைகள் சிதைவுற்ற நிலையில் காணப்படுகின்றன. இவை பேச்சிகுளம் கண்மாய் பகுதியில் தண்ணீருக்குள்ளும் தரையிலும் காணக் கிடைக்கின்றன.
 
இரும்புக் கழிவு குவியல்கள்.
 
இரும்பை செம்பிராங்கல் போன்ற கல்லாலான  மூலப் பொருளிலிருந்து பிரித்து எடுத்திருப்பது தெரிய வருகிறது. மேலும் அவற்றை இந்த உலைகள் மூலம் கொதி நிலைக்கு கொண்டு வந்து கற்களில் இருந்து இரும்பைப் பிரித்தெடுத்து இருக்கலாம். அப்படியான குவியல்கள் இரும்பு கழிவு குவியல்களாக இங்கு காணக்கிடைக்கின்றன.

சிவகங்கை : பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்கு எச்சம் கண்டெடுப்பு..
 
சுடுமண் குழாய்கள்.
 
சுடுமண்ணால் ஆன குழாய்கள் சிதைவுற்று காணக்கிடைக்கின்றன. இவை உலை அமைப்புகளை எரியூட்டுவதற்காக துருத்தி போல தூரத்திலிருந்து காற்று கொண்டுபோக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் மேலும் இரும்புகளை உருக்கி கம்பி வடிவமாக கருவிகள் செய்வதற்கும்  குழாய் அமைப்பை பயன்படுத்தி இருக்கலாம்.
 
அரசனேரி கீழமேடு.
 
 சிவகங்கையை அடுத்த விரிவாக்க பகுதியாக இது இருந்தாலும் அரசன் ஏரி கீழமேடு என்பது அரசனையும் தொன்மை சார்ந்த மேட்டையும் குறிப்பதாக கருதமுடிகிறது. மேலும் இந்த பேச்சி குளம் கண்மாயை ஒட்டியுள்ள கப்பரோட்டுகாளி முனீஸ்வரர் கோவில் போன்ற பகுதிகளிலும் பழமையான ஓடுகள் சிதைந்த நிலையில் பெருவாரியாக தரை மேற்பரப்பில் காணக் கிடைக்கின்றன.

சிவகங்கை : பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்கு எச்சம் கண்டெடுப்பு..
 
 
கல்லங்குத்தல்.
 
இப்பகுதி  மக்கள் இரும்பு கழிவுகள் நிறைந்து கிடைக்கக்கூடிய இந்த மேட்டுப் பகுதியை கல்லங்குத்தல் என பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். மேலும் புதுக்கோட்டை பகுதியில் இரும்பு உருக்கு ஆலைகள் தொடர்ச்சியாக இருந்ததற்கான சான்றாக பதிமூன்றாம் நூற்றாண்டு பாண்டிய மன்னன் வீரபாண்டியன் காலக் கல்வெட்டு செய்தியும் புதுக்கோட்டை சமஸ்தான புள்ளிவிவர செய்திக் குறிப்பும் ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
அதைத்தொடர்ந்து சிவகங்கைப் பகுதியிலும் இரும்பு உருக்காலை இருந்ததற்கான எச்சங்களை வெளிப்பட்டு இருப்பதில் சிவகங்கை தொல்நடைக் குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. மேலும் இதை தமிழ்நாடு தொல்லியல் துறை  ஆய்வுக்குட்படுத்தி விரிவான செய்திகளை தரவும் பாதுகாக்கவும் சிவகங்கை தொல் நடைக் குழு கோரிக்கை வைக்கிறது என்றார்.

தலைப்பு செய்திகள்

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
நெல்லை கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம்: கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
நெல்லை கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம்: கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
Madurai HC ; மலைகளை விட மதுக்கடைகள் முக்கியமா? - நீதிபதிகள் கேள்வி !
Madurai HC ; மலைகளை விட மதுக்கடைகள் முக்கியமா? - நீதிபதிகள் கேள்வி !
Sivagangai : அக்டோபர்-10 காரைக்குடியில் 10,000+ தனியார்துறை வேலைவாய்ப்புகள்!
Sivagangai : அக்டோபர்-10 காரைக்குடியில் 10,000+ தனியார்துறை வேலைவாய்ப்புகள்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget