Palani Temple Annadhanam: பழனி முருகன் கோயில் அன்னதான திட்டத்தில் பக்தர்களுக்கு புதிய டோக்கன் முறை அமல்
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெறும் அன்னதானத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் பல்வேறு தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும் .
இந்த கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து தினந்தோறும் பக்தர்கள் அதிகமானோர் வருவதுண்டு. தமிழகத்தில் அதிகமான வருவாய் தரக்கூடிய ஒரே கோயில் பழனி முருகன் கோயில். இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் உண்டு என்பதால் இங்கு வந்து வழிபட்டு செல்வோர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர்.
அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் நாள் முழுவதும் அன்னதான திட்டம் துவக்கபட்டு செயல்பட்டு வருகிறது. இதன்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மலைக்கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தினமும் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர்.
IND vs BAN LIVE Score: 256 ரன்களை குவித்தது வங்கதேசம்! அதிரடி காட்டும் இந்தியா!
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெறும் அன்னதானத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதனை தடுக்கும் வகையில் டோக்கன் முறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பழனி முருகன் கோவிலிலும் டோக்கன் முறை அமலுக்கு வந்தது. அதன்படி, கோவிலில் அன்னதானம் பெறுவதற்கு வரிசையில் நின்ற பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
Pangaru Adikalar Paassed Away: பெரும் சோகம்! பங்காரு அடிகளார் காலமானார் - பக்தர்கள் கடும் அதிர்ச்சி!
ஒவ்வொருவருக்கும் தலா ஒரு டோக்கன் வீதம் வழங்கப்பட்டது. ஒரு குழுவிற்கு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை 210 பக்தர்களுக்கு டோக்கன் வழங்கபடுகிறது.இதன்மூலம் தினமும் நடைபெறும் அன்னதானத்தில் எத்தனை பக்தர்கள் பங்கேற்றனர் என்பதை தெரிந்து கொள்வதுடன், முறைகேடுகளை தடுக்க ஏதுவாக அமையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.