Bangaru Adigalar Passed Away: பெரும் சோகம்! பங்காரு அடிகளார் காலமானார் - பக்தர்கள் கடும் அதிர்ச்சி!
Bangaru Adigalar Death: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்(Bangaru Adigalar) உடல்நலக்குறைவால் இன்று அதாவது அக்டோபர் 19ஆம் தேதி காலமானார். இவருக்கு வயது 82.
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் தலைமை ஆன்மீகவாதியாக இருந்தவர் பங்காரு அடிகளார். பக்தர்களும் இவரை பின்பற்றுபவர்களும் அன்புடன் ’அம்மா’ என்றே அழைத்து வந்தனர். இந்த கோவிலுக்கு வருபவர்கள் கட்டாயம் இவரிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள். ஆதிபராசக்தி கோவிலுக்கு தமிழ்நாடு மட்டும் இல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திராவில் இருந்தும் பகதர்கள் பரவலாக வருவார்கள். இந்த கோவிலுக்கு பொதுவாகவே பெண் பக்தர்கள் அதிகம். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டதில், இங்கு வந்து வழிபட்டால் இன்னல்கள் நீங்கி, நன்மைகள் நடக்கும் என்பது பகதர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதேபோல், பெண்கள் கோவிலின் கருவறைக்குள் சென்று வழிபடலாம். மேலும், ஐய்யப்பன் கோவிலுக்கு ஆண்கள் இருமுடி கட்டிக்கொண்டு செல்வதைப் போல், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பெண்கள் இருமுடி கட்டி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வந்ததனர். இதற்கெல்லாம் வழிவகுத்தவர் மறைந்த பங்காரு அடிகளார் ஆவார்.
ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் உடல் நல குறைவினால் உயிரழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே முன்னாள் ஆசிரியர் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1966ஆம் ஆண்டு துவக்கினார்.
மெல்ல மெல்ல இந்த ஆலயம் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்ளை ஒருங்கிணைந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் என துவக்கபட்டது. தைப்பூசம் நாட்களில் 48 நாட்கள் சிறப்பு பூஜை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு அளிப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாகவே சற்று உடல் நல குறைவில் இருந்து வந்த பங்காரு அடிகளார் இன்று மாலை திடீர் மரணமடைந்தார்.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என முதலில் உருவாக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். அவருக்கு வயது 82. ஆதி பராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களும் இவர் நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி கடந்த 2019 மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ வழங்கியது.
பல்வேறு பிரபல அரசியல் தலைவர்கள் ஆன்மீகவாதிகள் என அவ்வப்போது அவரை சந்திப்பது வழக்கம். தமிழ்நாடு மட்டுமல்லாது, 12 மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் சித்தர் பீடத்திற்கு பக்தர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்ற நிலை இருந்து வந்த நிலையில் பெண்களை கருவறைக்கு நேரடியாக சென்று அபிஷேகம் ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தியவர். மாதவிடாய் நாட்களில் கூட பெண்கள் கருவறைக்கு செல்லலாம் என வழிபாட்டுத் தலங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார்.