Crime: பொதுமக்களுக்கு தொடர் அச்சுறுத்தல்! பழனியில் 11 ரவுடிகள் அதிரடி கைது - போலீஸ் நடவடிக்கை
பழனியில் பொதுமக்களுக்கு தொடர் அச்சுறுத்தல் விடுத்து வந்த 11 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அடிதடி , கொலை, சூதாட்டம், கட்டப்பஞ்சாயத்து என ஈடுபட்டு வந்த ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அடிவார பகுதியில் மணி மற்றும் பாலமுருகனை ரவுடி கும்பல் அரிவாளால் ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயன்றது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
CM Stalin: "எல்லா ரவுடிகளையும் கட்சியில் வைத்துக்கொண்டு சட்ட ஒழுங்கை பேசலாமா?" - முதல்வர் ஸ்டாலின்
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க விடுத்த உத்தரவுப்படி பழனி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் மேற்பார்வையில் பழனி வட்ட காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான தனிப்படையினர் சூதாட்டம், கொலை முயற்சி, அடிதடி, சாட்சிகளை மிரட்டல் செய்த குற்றங்களுக்காக போக்கிரி பூபாலகிருஷ்ணன், கோபிநாத் துர்கா மற்றும் அவரது கூட்டாளிகள் கல்துறை மணிகண்டன், விஷ்னுவரதன், தினேஷ்குமார், கனி அரசன், ஸ்போர்ட் கார்த்தி, நாகேந்திர பிரசாத், பாலகிருஷ்ணன், குமார், ஜெனிவா கார்த்தி உட்பட 11 பேரை கைது செய்து 4 வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Rakshita: பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் 'மதுர' பட நாயகி.. இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?
மேலும் மேற்படி பூபாலகிருஷ்ணனன்,கோபிநாத் துர்கா உடன் வழக்கில் தொடர்புடைய கூட்டாளிகளை தனிப்படையினர் தேடி வருகினறனர். பிடிபட்ட ரவுடிகளில் இருவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பிக்க முயன்ற போது கீழே விழுந்து கால்முறிவு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மாவு கட்டு போட்டுள்ளனர். பழனி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.