மேலும் அறிய

Rakshita: பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் 'மதுர' பட நாயகி.. இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?

Rakshita : சிம்பு, விஜய் ஜோடியாக நடித்து அத்துடன் தமிழ் சினிமாவில் இருந்து விலகிய நடிகை ரக்ஷிதா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் விரல் விட்டு எனும் அளவிலான படங்களில் மட்டுமே நடித்து காணாமல் போன நடிகைகள் ஏராளம். அந்த பட்டியலில் இடம்பெற்ற நடிகைகளில் ஒருவர்தான் சிம்பு, விஜய் படங்களின் ஹீரோயினாக நடித்த நடிகை ரக்ஷிதா.

ஸ்வேதா என்ற தன்னுடைய பெயரை சினிமாவுக்காக ரக்ஷிதா என மாற்றிக்கொண்டார். அவரின் அப்பா ஒரு பிரபலமான சினிமாடோக்ராஃபராக இருக்க அவரின் அம்மா மம்தா ராவ் ஒரு பிரபலமான நடிகையாக இருந்துள்ளார். அதனால் ரக்ஷிதாவுக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்துள்ளது. 

Rakshita: பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் 'மதுர' பட நாயகி.. இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?

கன்னட திரையுலகில் புனித் ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான 'அப்பு' படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கன்னட சினிமாவில் அறிமுகமான ரக்ஷிதாவுக்கு உடனே தமிழ் சினிமாவில் இருந்து அழைப்பு வந்தது. தமிழ் சினிமாவில் சிம்பு ஜோடியாக 'தம்' படத்தில் அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற 'சாணக்யா சாணக்யா ஏதோ மந்திரம் செய்தாய்...' என அனைவரையும் மந்திரம் போட்டதுபோல ஆட்டிவைத்தார். அப்பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான உடனே விஜய் ஜோடியாக 'மதுர' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சோனியா அகர்வாலும் அப்படத்தின் ஒரு ஹீரோயினாக இருந்தாலும் மெயின் ஹீரோயினாக ரக்ஷிதா தான் நடித்திருந்தார். இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் ரக்ஷிதா பற்றியும் அவரின் தற்போதய நிலை குறித்தும் பார்க்கலாம். 

Rakshita: பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் 'மதுர' பட நாயகி.. இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?

'மதுர' திரைப்படத்தோடு தமிழ் சினிமாவுக்கு ஒரு முழுக்கு போட்டு விட்டு கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவந்தார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, ரவி தேஜா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார். கன்னடத்தில் படங்களை தயாரித்தும் உள்ளார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு நடிக்க வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்கினார் ரக்ஷிதா. கன்னட இயக்குநர் பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு முழுமையாக நடிப்பில் இருந்து விலகிய ரக்ஷிதா குடும்பத்தை கவனித்து வந்தார். இந்த தம்பதியினருக்கு மகன் ஒருவர் உள்ளார். 

Rakshita: பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் 'மதுர' பட நாயகி.. இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?

இந்நிலையில் சமீபத்தில் ரக்ஷிதா தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அந்த அளவுக்கு ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அதை பார்த்த திரை ரசிகர்கள் இது மதுர பட ஹீரோயினா என அதிர்ந்து போய்விட்டார்கள்.  

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget