மேலும் அறிய

தேனி: தொண்டர்கள் நம் பக்கம், குண்டர்கள் அவர்கள் பக்கம் : ஓபிஎஸ் பேச்சு.

ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்களிடம் தொண்டர்கள் நம் பக்கம், குண்டர்கள் அவர்கள் பக்கம்  பாதை மாறி போனால் ஊரு வந்து சேராது என்று ஓபிஎஸ் பேச்சு...

திண்டுக்கல் மாவட்டம் பழனி  தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் தலைமையில், அந்த மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நடைபெறும் உட்கட்சி பூசலால் நிர்வாகிகள் மாறி, மாறி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் நாள்தோறும் தனித்தனியே சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனிமாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  சென்னை கிளம்பி  சென்ற ஓபிஎஸ் திடீரென இன்று பெரியகுளம் வந்தார்.

தேனி: தொண்டர்கள் நம் பக்கம், குண்டர்கள் அவர்கள் பக்கம் : ஓபிஎஸ் பேச்சு.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் தலைமையில் ரெட்டியார் சத்திரம் ஒன்றிய செயலாளர் பசும்பொன், குள்ளிசெட்டிபட்டி பிரசிடெண்ட் வைகை பாலன், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, நிலக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட வேடசந்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதி, நகர ஒன்றிய பதவிகளில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகள்   300க்கும் மேற்பட்டோர்  பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு  தெரிவித்துள்ளனர். அவர்களுடன் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில், சுப்புரத்தினம், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் உரையாற்றிய பின் ஓபிஎஸ் உரையாற்றினார்.

தேனி: தொண்டர்கள் நம் பக்கம், குண்டர்கள் அவர்கள் பக்கம் : ஓபிஎஸ் பேச்சு.

அவர் பேசும்போது எந்த நோக்கத்திற்காக அதிமுக என்ற ஒரு பெரும் கழகத்தை, கட்சியை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா துவக்கினார்களோ அந்த கழகத்தை அவர்கள் வழி காட்டிய வழியில் நன்றாக நடத்திச் செல்ல வேண்டும் என்பதற்காக மிகுந்த ஆர்வத்தோடு கழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று நாம் அனைவரும் நினைக்கின்ற இந்த நேரத்தில் அசாதாரணமான சூழல் நிலவி வருகின்றது. இது ஏன் ஏற்பட்டது, எதனால் ஏற்பட்டது என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதிமுக கழகத்தை உருவாக்கிய எம். ஜி.ஆர். 10 ஆண்டு காலங்களும் அதன் பின்னர் ஜெயலலிதா 16 ஆண்டுகளும் என 26 ஆண்டுகள் நல்லாட்சி நடத்திய நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எனவே தமிழகத்தில் 30 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி கொடுத்த ஒரே கட்சி அதிமுக தான்.

எனவே இந்த கட்சியில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை தான் இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி பொதுக்குழு எப்படி நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பொதுக்குழு என்றால் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் தற்காலிக அவை தலைவரை முன்மொழிந்து அதனை எடப்பாடி பழனிச்சாமி வழிமொழிய வேண்டும். ஆனால் நான் மைக் பிடித்து பேச ஆரம்பித்த பொழுது கூச்சல் குழப்பம் அட்டூழியம் அவர்கள் ரவுடி கேடிகளை வைத்துக்கொண்டு கலவரம் செய்ய ஆரம்பித்தனர். இதில் சி.வி சண்முகம் உடனே எழுந்து வந்து நாங்கள் ஏற்கனவே நிகழ்ச்சி நிரல் படி ஏற்படுத்தி வைத்திருந்த 23 தீர்மானங்களை 23 தீர்மானங்களும் ரத்து என்று சிபி சண்முகம் அறிவித்துவிட்டு சென்றார். எந்த விவாதமும் இல்லை, என்னிடமும் கேட்கவில்லை.

தேனி: தொண்டர்கள் நம் பக்கம், குண்டர்கள் அவர்கள் பக்கம் : ஓபிஎஸ் பேச்சு.

பொருளாளர் என்ற முறையில் நான் கணக்கு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும், அதனையும் என்னை தாக்கல் செய்ய விட வில்லை. இதுவரையில்  அம்மா அவர்கள் எனக்கு பொறுப்பு கொடுத்து அந்த பொறுப்பை திருப்பி என்னிடமிருந்து பெற்றுக் கொண்டதாக சரித்திரமே கிடையாது. அந்த அளவிற்கு நான் அவர்களுக்கு விசுவாசமாக இருந்துள்ளேன். எனவே இந்த கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டு விடும் என்று நான் அருகில் அமர்ந்துள்ள வைத்தியலிங்கம் அவர்களிடம் இந்த பொதுக்குழுவில் பொதுக்குழுவில் இல்லாதவர்கள் ஏராளமானோர் இருப்பதால் நாம் சென்று விடலாம் என்று கூறி அமைதியாக சென்று விட்டோம். பின்னர் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் இரவு முழுவதும் ரவுடிகளை வைத்துக்கொண்டு மது அருந்தி கேலிக்கூத்துகளில் ஈடுபட்டு வந்திருந்தனர். நாங்கள் அந்த பொதுக்குழுவிற்கு செல்ல வேண்டாம் எனவே தலைமைக் கழகம் சென்று அமர்ந்து விடலாம் என்று சென்ற நிலையில் நிராயுதபாணியாக சென்ற எங்களை தாக்க ஆரம்பித்தது அவர்கள்தான்.

தேனி: தொண்டர்கள் நம் பக்கம், குண்டர்கள் அவர்கள் பக்கம் : ஓபிஎஸ் பேச்சு.

எனவே இந்த இரு மாபெரும் தலைவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த இயக்கத்தை உள்ள தொண்டர்கள் நம்பக்கமும் குண்டர்கள் அவர்கள் பக்கமும் உள்ளனர். பாதை மாறி போனால் ஊரு வந்து சேராது என ஏற்கனவே நாம் சேவல் என்று இரண்டு அணிகளாக இருந்த பொழுது முதலில் மக்கள் கொடுத்த அடியை தான் மீண்டும் நமக்கு கொடுப்பார்கள் என்பதால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமே ஒழிய இதில் பிடிவாதம் காட்டக்கூடாது என்றும் நான் முதலமைச்சராக வேண்டும் என்ற நிலையில் கூறவில்லை என்றும் எம்ஜிஆர் ஜெயலலிதா கட்டிக் காப்பாற்றி ஆரம்பித்து கொடுத்த இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தி செல்ல வேண்டும் என்று பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
Embed widget