மேலும் அறிய
Advertisement
ஆர்எஸ்எஸ் குறித்து பேச்சு - திருமாவளவன் கைது செய்யப்படுவாரா..?
“திருமாவளவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த பிறகு உடனடியாக மக்களவை சபாநாயகரை சந்தித்து அவரது எம்பி பதவியை சட்டப்படி நீக்கம் செய்ய முயற்சி செய்வேன்” - ராமசாமி
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் கடந்த சில மாதங்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பு என பல்வேறு இடங்களில் பேசி வருவதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது. "மனு ஸ்மிருதி என்ற நூலில் ஆர்எஸ்எஸ் என்பது இந்துத்துவா என்கிற சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் ஒரு பயங்கரவாத அமைப்பு." என்றும் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி சட்ட நிலைக்குழு உறுப்பினரும், முன்னாள் நீதிபதியுமான டாக்டர் ராமசாமி திருமாவளவன் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் அவனியாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது கட்டுப்பாட்டை மீறி இவ்வாறு பேசுவது தவறு. அவர் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த மாதம் 6ஆம் தேதி பாஜக சார்பில் புகார் அளித்தோம். அதற்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய பிறகு தமிழ்நாடு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதன்பிறகு இன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில் திருமாவளவன் பேசியது மற்றும் மனு ஸ்மிருதி நூலில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, அவர் மீது 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
திருமாவளவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த பிறகு உடனடியாக மக்களவை சபாநாயகரை சந்தித்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சட்டப்படி நீக்கம் செய்ய முயற்சி செய்வேன்” என்றார்.
மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவர்கள்தான். அப்படி என்றால் அவர்கள் எல்லாம் தீவிரவாதியா என கேள்வி எழுப்பி ராமசாமி, திருமாவளவன் இந்திய சட்டத்திட்டத்தின்படி தவறு செய்துள்ளார் என்று கூறினார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சுமோட்டோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற சிறப்பு என்னவென்றால் நாட்டு மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில், சாதி கலவரம் அல்லது மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது குற்றம் 153A, 153B, 295A, 505 IBC படி அவரை கைது செய்யவேண்டும். இதனால் 24 மணி நேரத்தில் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்” என்று கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - DRUNK AND DRIVE: வாகன ஓட்டிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: மதுரையில் புதிய வகை ப்ரீத் அனலைசர் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion