மேலும் அறிய
Advertisement
Madurai: மதுரையில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வைக்க தடை கோரிய மனு தள்ளுபடி
அவர் சாதிய வழியிலான தலைவர் என்பதால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மனுதாரர் புகார்
ராமநாதபுரத்தைச் சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், "தமிழகத்தில் சிலைகளை அவமரியாதை செய்வது, உடைப்பது போன்ற பிரச்சனைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சிலைகளை அமைப்பதற்கும், அவற்றிற்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் அரசு ஏராளமான தொகையை செலவிடுகிறது. இந்நிலையில், மதுரை ஆனையூர் பகுதியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வைக்க தமிழக உள்துறைச் செயலர் அனுமதி வழங்கி உள்ளார்.
அவர் சாதிய வழியிலான தலைவர் என்பதால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு ஆனையூர் பகுதியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வைக்க அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள்,கடந்த 19ஆம் தேதி சிலை திறக்கப்பட்டுவிட்டதால் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பிரபல ரவுடி காளிமுத்து (எ) வெள்ளை காளி-யை திருச்சி மத்திய சிறையில் இருந்து திண்டுக்கல் மாவட்ட சிறைக்கு மாற்ற கோரிய வழக்கு தள்ளுபடி
மதுரை, காமராஜபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி காளிமுத்து (எ) வெள்ளை காளி மனைவி திவ்யா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "எனது கணவரின் உடன்பிறந்த அண்ணன் சின்னமுனுசு என்பவரை கடந்த 2004ம் வருடம் வி.கே.குருசாமி என்பவரும் அவரது ஆட்களும் சேர்ந்து கொலை செய்தனர். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு இருதரப்பிலும் பல வழக்குகள் மதுரை மாநகர காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் பல வழக்குகளில் எனது கணவரையும் பொய்யாக சேர்த்து காவல்துறையினர் பதிந்துள்ளனர். இதனால் எனது கணவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றது.இந்நிலையில் 2020-ல் தென்காசி குற்றாலத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் எனது கணவர் வெள்ளை காளியை கைது செய்து அவரது வலது கணுக்காலை இரும்பு கம்பியால் அடித்து உடைத்தனர்.இந்நிலையில் கடந்த 1-1/2 வருடங்களுக்கும் மேலாக விசாரணை கைதியாக திருச்சி மத்திய சிறையில் எனது கணவர் இருந்து வருகிறார்.
இவ்வாறான நிலையில் எனது கணவர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் மதுரை நீதிமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதால் வழக்கின் வாய்தாவிற்கு அடிக்கடி எனது கணவரை திருச்சி மத்திய சிறையிலிருந்து மதுரைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வருகின்றனர்.மேலும் நானும் எனது ஒரு வயது பெண் குழந்தையும் இங்கிருந்து திருச்சி மத்திய சிறைக்கு சென்று எனது கணவரை பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது எனவே எனது கணவரை திருச்சி மத்திய சிறையில் இருந்து திண்டுக்கல் மாவட்ட சிறைக்கு மாற்ற உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சதீஸ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில், குற்றவாளி திருச்சி மத்திய சிறையில் உள்ளார். தற்போது, திண்டுக்கல் மாவட்ட சிறைக்கு மாற்றம் செய்ய கோரியுள்ளார்.குற்றவாளி மீது 8 கொலை வழக்குகள் மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகள் பல உள்ளது. எனவே, குற்றவாளிக்கு திண்டுக்கல் மாவட்ட சிறைசாலை என்பதால் போதிய பாதுகாப்பு வழங்க முடியாத நிலை உள்ளது. என தெரிவிக்கப்பட்டது.இதனை ஏற்று நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion