மேலும் அறிய
Advertisement
ரயில் மீது ஏறி விளையாடிய சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது - ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை !
25000 வோல்ட் மின்சார தாக்குதல் பெரிய ஆபத்தை விளைவிக்கும். எனவே பொதுமக்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கும் மின் பாதையை நெருங்க வேண்டாம் என மீண்டும் ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கிறது.
மதுரை கோட்டத்தில் பெரும்பாலான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. அந்த மின் பாதையில் ரயில் இயக்குவதற்காக 25000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. இது பற்றிய எச்சரிக்கை விளம்பரங்கள் ரயில் நிலையங்களிலும் முக்கிய இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.
மதுரை கூடல்நகரில் ரயில்மீது ஏறி விளையாடிய சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது, ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை !
— Arunchinna (@iamarunchinna) July 18, 2022
”25000 வோல்ட் மின்சார தாக்குதல் பெரிய ஆபத்தை விளைவிக்கும். எனவே பொதுமக்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கும் மின் பாதையை நெருங்க வேண்டாம்- என எச்சரிக்கை @drmmadurai #Madurai
இதையெல்லாம் மீறி நேற்று முல்லை நகர் பழனி என்பவரின் மகன் விக்னேஸ்வர் என்ற 17 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கூடல் நகர் சரக்கு நிலையப் பகுதியில் விளையாட வந்துள்ளான். விளையாடிக் கொண்டிருக்கும்போது மதியம் 02.45 மணியளவில் அருகில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பெட்டி மீது ஏறியுள்ளான்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sellur Raju: "பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம்" - பச்சை கொடி காட்டும் செல்லூர் ராஜூ !
அப்போது, 25000 வோல்ட் பாயும் மின்பாதையிலிருந்து மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமுற்றான். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளான். வீடுகளில் பயன்படும் 230 வோல்ட் மின்சாரம் தாக்குதலையே தாங்க முடியாது. 25000 வோல்ட் மின்சார தாக்குதல் பெரிய ஆபத்தை விளைவிக்கும். எனவே பொதுமக்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கும் மின் பாதையை நெருங்க வேண்டாம் என மீண்டும் ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கிறது.
மதுரை, கூடல் நகரில் ரயில் மீது ஏறி விளையாடிய சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
அரசியல்
தமிழ்நாடு
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion