மேலும் அறிய
Advertisement
Madurai Airport: மதுரை மக்களே ஹேப்பியா..?.. நாளை முதல் 24 மணி விமான சேவை தொடக்கம்
Madurai Airport: மதுரை விமான நிலைய 24 மணி விமான சேவை நாளை முதல் தொடக்கம்- முதல் கட்டமாக நாளை இரவு 10:45 மணிக்கு மதுரை டூ சென்னை விமான சேவை.
மதுரை விமானநிலையம்
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சென்னை, கோவை, திருச்சி சர்வதேச விமான நிலையம் ஆகவும் மதுரை, தூத்துக்குடி உள்நாட்டு நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக ஆக்க வேண்டும் என 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை இருந்து வரும் வேலையிலே முதலில் 24 மணி நேரம் செயல்படும் விமான நிலையமாக மாற்றினால் தான் சர்வதேச அந்தஸ்து கொடுக்க முடியும் என முட்டுக்கட்டை போட்டிருந்தது.
மதுரை விமானநிலையம் 24 மணி நேர சேவை
24 மணி நேர விமான சேவை இல்லாததால் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதியில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகள் திருவனந்தபுரம், சென்னை ஆகிய விமான நிலையங்களை பயன்படுத்தும் சூழல் இருந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் தென் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் அடிக்கடி இதற்காக குரல் எழுப்பி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதமே விமான நிலையத்தை 24 மணி நேரம் செயல்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என இந்திய விமான நிலையம் அறிவித்திருந்த நிலையில் அதன் முதல் கட்டமாக நாளை டிசம்பர் 20ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து இரவு 10:45 மணிக்கு கடைசி இண்டிகோ விமானம் சென்னை புறப்படும் என அறிவிப்பு வந்துள்ளது.
24 மணி நேர சேவையின் முதல் கட்டமாக செயல்பாடு
ஏற்கனவே சென்னையில் இருந்து 8:45 மணிக்கு வந்து மீண்டும் மதுரையிலிருந்து 9 மணிக்கு கடைசி விமானம் சென்று வந்தது. தற்போது 24 மணி நேர சேவை அறிவித்த பிறகு முதல் விமானமாக சென்னையிலிருந்து 9:25 மணிக்கு புறப்பட்டு இரவு 10:20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்து. பின்னர் மீண்டும் பயணிகளுடன் 10:45க்கு மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 12:05 மணிக்கு சென்னை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலைய 24மணி நேர சேவையின் முதல் கட்டமாக இது பார்க்கப்படு வருவது குறிப்பிடத்தக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion