இந்தியர்களே.. இந்த 10 நாடுகளுக்கு 'விசா' இல்லாமல் செல்லலாம்!

1. தாய்லாந்து

இந்தியர்கள் தாய்லாந்தில் 60 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கிக்கொள்ளலாம். தேவைப்பட்டால் மேலும் 30 நாட்கள் அதிகரித்துக்கொள்ளலாம்

2. பூட்டான்

விமானம் வழியாக பயணம் செய்தால் 30 நாட்கள் அனுமதியும் சாலை வழியாக பயணம் செய்தால் 15-7 நாட்கள் அனுமதியும் கிடைக்கும்

3. நேபால்

எவ்வளவு நாட்கள் தங்கவேண்டும் என்பது நீங்கள் எடுக்கும் சுற்றுலா விசாவை பொறுத்தது. 15 நாட்கள், 30 நாட்கள் என உங்கள் வசதிக்கேற்ப விசா எடுத்துக்கொள்ளலாம்

4. மொரீசியஸ்

90 நாட்கள் விசா இல்லாமல் தங்கிக்கொள்ளலாம். இயற்கை விரும்புவர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாக அமையும்

5. மலேசியா

மலேசிய அனுபவங்களை பெற 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கிக்கொள்ளலாம்

6. கென்யா

சுற்றுலாவை மேம்படுத்தும் விதாமாக கென்யா அரசு இந்தியர்களுக்கு 90 நாட்கள் விசா இல்லாத வருகையை அறிவித்துள்ளது

7. ரஷ்யா

2025ல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு பயணிக்கலாம் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது

8. கிரிபாஸ்

பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவான கிரிபாஸில் 90 நாட்கள் விசா இல்லாமல் தங்கலாம்

9. கிரானடா

கரிபியக் கடலின் ஸ்பைஸ் தீவில் 90 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கிக்கொள்ளலாம்

10. செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்

”தி மதர் காலனி ஆஃப் வெஸ்ட் இண்டீஸ்” என்று அழைக்கப்படும் இந்த கரிபியத் தீவுகளில் 90 நாட்கள் விசா இல்லாமல் தங்கலாம்