மேலும் அறிய

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: எப்போது திறக்கப்படும்? வெளியானது முக்கிய தகவல்! 2026-ல் முதல் கட்டம் நிறைவு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஹெலிகாப்டர் வந்து இறங்குவது போன்ற ஹெலிபேட் தளம் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்ட மக்களின் நீண்ட கனவாக உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எப்போது நிறைவடையும் என எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
 
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 2023 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் துவங்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 870 படுக்கை வசதியுடன் மருத்துவமனை, 38 படுக்கைகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கென வகுப்பாறை கட்டிடம், ஆய்வகக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூபாய் 1624 கோடியாக அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான முழு நிதியும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜெய்கா நிறுவனத்தின் மூலம் பெறப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டிருந்தது.
 
எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டப்பட உள்ளது
 
கட்டுமானப் பணிகளுக்கான நிதி தற்போது மத்திய அரசு நிதியுடன் சேர்த்து ரூ.1977.80 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் 21 கோடி மதிப்பீட்டில் ஆறு கிலோ மீட்டருக்கு சாலை பணிகளும் நிறைவடைந்துள்ளது. எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்த தென் மாவட்ட மக்களுக்கு தற்போது கடந்த வருடம்  மார்ச் மாதம் 4ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளுக்கான தனியார் கட்டுமான L&T நிறுவனம் சார்பில் முதற்கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை சமன் செய்யும் பணிகளை தொடங்கினர். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. 950 படுக்கைளுடன், பத்து தளங்களுடன் மதுரை எய்ம்ஸ்  மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 
சோலார் வசதி, கார் பார்க்கிங் என பிரம்மாண்டமாக கட்டமைப்புகள் வரவுள்ளது
 
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் எய்ம்ஸ் நிர்வாகம் அமைய உள்ள  முப்பரிமாண மாதிரி வடிவமைக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கட்ட கட்டட பணிகள் 2026 ஜனவரியில் நிறைவடையும் என்றும், 2027-ம் ஆண்டு இரண்டாம் கட்ட கட்டிடப் பணிகள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளதாக.  மதுரை எய்ம்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஹெலிகாபிட்டர்  வந்து இறங்குவது போன்ற ஹெலிபேட் தளம் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சோலார் வசதி, கார் பார்க்கிங் என பிரம்மாண்டமாக கட்டமைப்புகள் உள்ளவாறு முதல் முறையாக முப்பரிமாண மாதிரி வீடியோவை வெளியிட்டுள்ளது.
 
 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு... தென் தமிழகத்தில் மருத்துவப் புரட்சி !
500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு... தென் தமிழகத்தில் மருத்துவப் புரட்சி !
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: நவராத்திரி விடுமுறையில் குவிந்த 1.5 லட்சம் பக்தர்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: நவராத்திரி விடுமுறையில் குவிந்த 1.5 லட்சம் பக்தர்கள்!
தேனி மாவட்ட மக்களே கவனியுங்கள்! சுருளி, கும்பக்கரை அருவிகள் குறித்த முக்கிய அறிவிப்பு!
தேனி மாவட்ட மக்களே கவனியுங்கள்! சுருளி, கும்பக்கரை அருவிகள் குறித்த முக்கிய அறிவிப்பு!
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இடத்தில் கார் பார்க்கிங்... தடையை மீறிய வாகனங்களுக்கு அபராதம் !
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இடத்தில் கார் பார்க்கிங்... தடையை மீறிய வாகனங்களுக்கு அபராதம் !

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
coimbatore power cut: கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
LocalBody Election: உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
Chennai Airport: மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
School Leave: விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
Embed widget