மேலும் அறிய
Advertisement
லடாக்கை காப்பாற்றியது பிரதமர் மோடி தான்.. சொல்கிறார் மதுரை ஆதீனம்!
இந்தியாவிடம் லடாக் இருப்பதற்கு பிரதமர் மோடியே காரணம் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்
"மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகசம்பந்த தேசிக பராமாசாரிய சாமிகள்" என்று போற்றப்படுபட்டவர் மதுரை 292ஆவது ஆதீனம் அருணகிரிநாதர். இவர் காலமான நிலையில் கடந்த 14ஆம் தேதி தருமை ஆதீனம் ஞானாசிரிய அபிஷேகம், கிரியாவிதிகள் ஹோமங்கள் செய்து 293ஆவது மதுரை ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து மதுரை ஆதீனத்தின் 293ஆவது ஆதீனமாக மதுரை ஆதீன மடத்தில் உள்ள பீடத்தில் அமரும் ஞான பீடாரோகன நிகழ்வு தருமைபுர ஆதீனத்தின் 27ஆவது குரு மகா சன்னிதானம் கைலை மாசிலாமணி தேசிக ஞானதேசிக சுவாமிகள் முன்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மதுரையின் 293-வது ஆதீனம் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் விடுதலை போராட்ட வீரர் வஉ.சிதம்பரனாரின் 150வது பிறந்தளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அவரது திருவுருவ சிலைக்கு மதுரை 293வது ஆதீனமாக ஸ்ரீ லஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார். வ.உசியின் 150வது பிறந்தநாள் முன்னிட்டு 150 பெண்கள் பொங்கல் வைத்து வைத்தனர். இந்நிகழ்வை மதுரை ஆதீனம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் சந்தித்தார்...” இந்துமதத்தில் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறுகிறது. அதேபோல் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தில் தமிழில் அர்ச்சனை நடத்த அவர்களை ஒற்றுமைப்படுத்த முடியுமா?. இந்து சமயத்தில் மட்டும் இது நடைபெறக்கூடாது. அனைத்து சமுதாய மக்களையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும். நித்யானந்தா கைலாசம் நாட்டிற்கு சென்று ""கை லாஷ்"" ஆகிவிட்டார். நித்யானந்தா மதுரை ஆதீனமாக முடியாது. தற்போது நாட்டில் அனைவருக்கும் தேசப் பற்று குறைந்து விட்டது. தெய்வபக்தி பணத்தில் தான் உள்ளது.
வஉ.சிதம்பரனாரை போல் தேசப்பற்று இன்றைய இளைஞர்களிடம் இல்லை. இளைஞர்கள் எதையோ இழந்ததைப் போல் அழைகிறார்கள். அதற்கு காரணம் அரசியலும், சினிமாவும் ஆகும். தற்போதைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது. இதனை மாற்றப்படவேண்டும். சுதந்திரமடைந்து நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது வஉ சிதம்பரனார் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. ஜவஹர்லால் நேரு காலத்தில் இந்தியாவின் லடாக் பகுதியில் சீன ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது பிரதமர் மோடி அதனை மாற்றி நம் வசம் வைத்துள்ளார்” என்றார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion