மேலும் அறிய
Advertisement
மதுரை உட்பட தென் மாவட்டங்களில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியச் செய்திகள்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் பனைமரங்கள் வளர்க்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திரமோடி பாராட்டி உள்ளார்
1. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நோக்கி வந்த சேது எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மீது மரம் முறிந்து விழுந்தது. என்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
2. ராமநாதபுரம் வசந்த நகர் பாலசுப்ரமணிய கோயில் தெரு கிழக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 57. இவர், ராமநாதபுரத்தில் எலக்ட்ரிக்கல் தொழில் செய்து வருகிறார். தொண்டி கனரா வங்கி கிளையில் கணக்கு தொடங்கியுள்ளார். ரூ.4.25 லட்சம் மோசடி செய்ததாக வங்கி மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
3. தூத்துக்குடி பகுதியில் உள்ள காசுவாரி தீவு, நல்லத்தண்ணி தீவுகளிலும் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் உள்ள 10 தீவுகளில் பனைமர விதைகளை நடவு செய்யும் பணி விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில், தீவுகளில் பனைமரங்கள் வளர்க்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திரமோடி, பாராட்டி உள்ளார். இதனால் வனத்துறையினர் மற்றும் கடலோர மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
4. மதுரை மாவட்டம் மேலூர் அருகே குடிபோதையில் கணவர் தினமும் தொல்லை செய்வதாக மனைவி அம்மி கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார்.
5. அ.தி.மு.கவில் எந்த பிரச்னையும் இல்லை ஆரோக்கியமாக உள்ளது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி.
6. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளம் கிராமத்தில் வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டை தொட்ட 3 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
7. விருதுநகர் அருகில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் இரு குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று தாய் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8. தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மதுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
9. ராமநாதபுரம் கடலில் மாயமான புதுக்கோட்டை மாவட்ட மீனவர் உடல் ராமநாதபுரம் அருகே பிரப்பன் வலசை கடலில் கரை ஒதுங்கியது.
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 8 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75505-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 15 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 74208-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1183 இருக்கிறது. இந்நிலையில் 114 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உணவு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion