மேலும் அறிய
மதுரையில் துவங்கியது அரசுப் பொருட்காட்சி.. குலுங்கப் போகிறது தமுக்கம் மைதானம்
நலத்திட்டங்கள், அவற்றில் பயன் பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குகள் இடம்பெற உள்ளன.

ராட்டினம்
Source : whats app
நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து அரசுப் பொருட்காட்சியினை கண்டுகளித்திடலாம்
அரசுப் பொருட்காட்சி 2025
மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி 2025 தொடக்க விழா 04.05.2025 அன்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சௌ.சங்கீதா, தெரிவித்ததாவது..,” திருவிழா நகரான மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில் மதுரை சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு அரசுப் பொருட்காட்சியை சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி-2025 தொடக்க விழா முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொண்டு முடிக்கப்பட்டது.
பொருட்காட்சியில் என்ன அரங்கங்கள் அமைகிறது
இந்தப் பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பள்ளிக் கல்வித்துறை இந்து சமய அறநிலையத்துறை காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும் மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம். ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கண்கவரும் வகையில் அரங்குகள்
அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றில் பயன் பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குகள் இடம்பெற உள்ளன. மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதேபோல, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள். பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன. மேலும், தினந்தோறும் இன்னிசை கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அரசுப் பொருட்காட்சி 04.06.2025-இன்று தொடங்கி 45 நாட்கள் தினமும் மாலை 3.45 மணிமுதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும். நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து அரசுப் பொருட்காட்சியினை கண்டுகளித்திடலாம்” என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement





















