மேலும் அறிய

தனியார் மயமா? போராட்டம்தான் - எச்சரிக்கும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம்

தனியார் மயமாக்கல் அடிப்படையில் மாநில நெடுஞ்சாலை துறை ஆணையம் அமைத்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் - தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க பொதுச் செயலாளர் அம்சராஜ்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறைசாலை பணியாளர் சங்கம் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் கூறும்போது,"தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பாக 25வது ஆண்டு தொடக்க விழா மற்றும் மாநில மாநாட்டை திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்துவதாக தீர்மானித்துள்ளோம். கடந்த 25 ஆண்டுகளாக நெடுஞ்சாலைத் துறையில் தனியார் மையமாக்கலை எதிர்த்து போராட்டத்தை நடத்திக் கொண்டே இருக்கிறோம். மக்களின் சேவை துறையாக நெடுஞ்சாலை துறை இருக்க வேண்டும் என்பதற்காக அதனை பாதுகாத்து 25 ஆண்டுகால போராட்டம் இன்றும் நீடித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைப்போம் என சொல்லி இருக்கிறார்.

தனியார் மயமா? போராட்டம்தான் - எச்சரிக்கும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம்

இது தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் போல் இருக்கும் என கூறியுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க 18 லட்சம் ரூபாய் செலவாகும் என்ற நிலையில் மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க 250 கோடி செலவு செய்ததாக அதில் முறைகேடு நடந்திருப்பதாக செய்தியை வெளியிட்டுள்ளார்.இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாநில நெடுஞ்சாலை துறை ஆணையம் அமைப்பது என்பதும், ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் அவருக்கு நெருக்கமான நபரை நியமிப்பதாக செய்தி வெளியாகி கொண்டு இருக்கிறது.

தனியார் மயமா? போராட்டம்தான் - எச்சரிக்கும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம்

நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைப்பதன் மூலமாக அது தனியார் பராமரிப்பதற்கு முறைகேடு நடப்பதற்கு வழிவகுக்கும்.அரசின் விதிகள் பெருமளவில் செலவாகும். 3500 நிரந்தர பணியிடம் ஒழிக்கப்படும். கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்படும். இதுபோன்ற தனியார் மயமாக்கல் கொள்கை எதிர்த்த போராட்டத்தை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் என நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

தனியார் மயமா? போராட்டம்தான் - எச்சரிக்கும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம்

தற்போது திண்டுக்கல்லில் நடைபெற உள்ள மாநாட்டில் தனியார் மயமாக்கல் மூலம் ஏற்படும் பாதிப்புகள், சாலை பணியாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம்? வேலை இல்லாத இளைஞர்களின் வேலைவாய்ப்பு எவ்வாறு பறிபோகும் என்பதை கலை வடிவத்தில் கொண்டு செல்லக்கூடிய பிரச்சார இயக்கத்தை முன்னெடுக்கக்கூடிய வகையில் மக்களை சந்திக்க கூடிய நோக்கில் பயணிக்க போகிறோம். ஆகஸ்ட் 19ஆம் தேதி மாநில நெடுஞ்சாலை துறை ஆணையம் அமைக்கும் எதிர்த்து, நெடுஞ்சாலை சீரமைப்பு என்ற பெயரில் நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் முடிவை எதிர்த்து சென்னை கிண்டியில் அமைந்துள்ள தலைமை பொறியாளர் அலுவலகத்தில் அனைவரும் ஒன்று கூடி அமைச்சரிடம் முறையீடு வைக்கின்ற இயக்கத்தை உருவாக்குவோம் என மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.

தனியார் மயமா? போராட்டம்தான் - எச்சரிக்கும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம்

தமிழக அரசு தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும். தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம் அவ்வாறு நிறைவேற்றாத பட்சத்தில் தொடர்ந்து மக்களை திரட்டி போராட்டம் செய்யக்கூடிய நடவடிக்கைகளில் செல்ல வேண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget