மேலும் அறிய
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் சந்திப்பு.. பிரம்மாண்ட ஏற்பாடு!
முகவர்கள் எங்கே அமர வேண்டும், அவர்களுக்கான தண்ணீர் வசதி எங்கே உள்ளது என்கிற மாநாட்டின் வரைபடம் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மூர்த்தி தகவல்.

அமைச்சர் மூர்த்தி பேட்டி
Source : whatsapp
மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் திமுகவின் தென் மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வாக்கு சாவடி நிலை முகவர்கள்
மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் நாளை (பிப்ரவரி 21) திமுகவின் தென் மண்டல வாக்கு சாவடி நிலை முகவர்கள், வாக்கு சாவடி குழு உறுப்பினர்கள் மற்றும் வாக்கு சாவடி டிஜிட்டல் முகவர்கள் பங்கேற்கும் "என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி" எனும் தென் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
அமைச்சர் பேட்டி
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "மதுரையில் தென் மண்டலத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகையில் "தென் மாவட்டத்தில் உள்ள 58 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1,98,000 வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
வருவதற்கு நான்கு வழிகள் அமைக்கப்பட்டுள்ளது
தென் மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு குடிநீர், இருக்கை, உணவு என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, மாநாட்டில் பங்கேற்க உள்ள முகவர்கள் வருவதற்காக அடையாள அட்டை கொடுக்கப்பட்டு அவர்கள் வருவதற்கு நான்கு வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. க்யூ ஆர் கோடு ஸ்கேன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது, மாநாட்டில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது. 15,000 மகளிர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க உள்ளனர். முகவர்கள் எங்கே அமர வேண்டும், அவர்களுக்கான தண்ணீர் வசதி எங்கே உள்ளது என்கிற மாநாட்டின் வரைபடம் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என கூறினார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























