திண்டுக்கல்: முன்பகையால் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல்லில் முன்பகை காரணமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை. பரபரப்பு தீர்ப்பு.
திண்டுக்கல் கிழக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவரின் தங்கை பவானியை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கண்ணனுக்கும் பவானிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து பவானி கணவனிடம் கோபித்து கொண்டு தனது அண்ணன் வீரபாண்டி வீட்டுக்கு சென்றார். இதனை அடுத்து வீரபாண்டி தனது மைத்துனரான கண்ணனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி மருதாணி குளம் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு வீரபாண்டிக்கும் கண்ணனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்படுகிறது. அப்பொழுது கண்ணனின் தந்தை துரைசிங்கம் (63) வீரபாண்டியை பிடித்துக்கொள்ள கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வீரபாண்டியை தலை, கை, கால், கழுத்து என பல இடங்களில் வெட்டினார். இதில் படுகாயமடைந்த வீரபாண்டியை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கடலூரில் 300 நாதஸ்வர, தவில் கலைஞர்கள் முன்னிலையில் நடந்த திருக்கல்யாண உற்சவம்
பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வீரபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தந்தை துரைசிங்கம் மகன் கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி ஜமுனா பரபரப்பு தீர்ப்பு வழங்கினார் அதில் தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து குற்றவாளிகள் இரண்டு பேரும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




















