திண்டுக்கல் : பழனியில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து செப்பேடு கண்டுபிடிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சத்தியன் என்பவரது வீட்டில் இருந்த 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து செப்பேடு கண்டுபிடிப்பு.
பழனியை சேர்ந்த சத்தியன் என்பவர் தனது வீட்டில் செப்பேடு ஒன்றை பாதுகாத்து வந்தார். அதை தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி ஆய்வு செய்தார். பின்னர் இந்த செப்பேடு குறித்து அவர் கூறியதாவது, இந்த செப்பேடு 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது. விஜயநகர மன்னர் 2-ம் வெங்கட்டநாயக்கரின் ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செப்பேடு 28 சென்டிமீட்டர் நீளமும், 17 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது. இதில் 91 வரிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் சேவலும், மயிலும், பாம்பு கொண்டது போன்ற முருகப்பெருமானின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. செப்பேட்டில், முருகப்பெருமானின் சிறப்புகளும், விஜயநகர மன்னர் மல்லிகார்சுனராயர் தொடங்கி வெங்கட்டநாயக்கர் வரையிலான மன்னர்களை புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. மேலும் சாலி மூல மார்க்கண்டடேய கோத்திர பண்டாங்களின் சிறப்புகளும் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக பண்டாரங்கள் இரண்டு சொல் உரையாதவர்கள், செங்கோல் புரிந்து வாழ்பவர்கள், கரிகால சோழனின் பிரியத்துக்கு உரியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்..
பழனி அரசு பள்ளி மாணவிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியல் சம்பவத்தை படம் பிடித்த செய்தியாளர்களை படம் பிடிக்கக்கூடாது எனக்கூறி பழனி காவல்துறை டிஎஸ்பி சிவசக்தி தாக்க முயன்றதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சத்யா நகரில் அரசு ஆதிதிராவிட நலத்துறை மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது.இங்கு பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு பாலியல் தெடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக எழுந்த பிரச்சனையில் அதே பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விடுதி கண்காணிப்பாளர் அமுதா என்பவர் பணியினை நீக்கம் செய்யப்பட்டார்.இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அமுதாவையே மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனக்கோரி இன்று விடுதி மாணவிகள் பதாகைகளை ஏந்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் இந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவிகளின் சாலை மறியல் போராட்டத்தை செய்தியாளர்கள் படம் பிடித்தனர். அப்போது ஆவேசம் அடைந்த பழைய டிஎஸ்பி சிவசக்தி படம் பிடிக்கக் கூடாது எனக் கூறி செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றி ஆவேசமடைந்த டிஎஸ்பி சிவசக்தி அங்கு படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளரை தாக்க முயன்றார். இதனால் அங்கு கடும் பத்திரிக்கையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மற்ற போலீசார் டிஎஸ்பியை சமாதானம் செய்தனர். அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டநிலையில், போராட்டத்தை கைவிட பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய டிஎஸ்பி, போராட்டத்தை செய்தியாக வெளியிடும் பத்திரிகையாளர்கள் மீது ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்