மேலும் அறிய
Advertisement
சென்னை - திருநெல்வேலி கோடை விடுமுறை சிறப்பு ரயில் ! முழு விவரம்
இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
கோடை வெப்பம்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு நகரங்களில் வெப்பம் நிலை அதிகளவு பதிவானதால் வெப்ப அலை நாட்டை உலுக்கி வருகிறது. குறிப்பாக, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்கள் வெப்ப அலையின் தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. தமிழகத்திலும் பொதுமக்கள் தாங்க முடியாத அளவிற்கு வெயில் அடிக்கிறது. இந்நிலையில் கோடை வெப்பத்தின் காரணமாக ஆண்டுதோறும் விடப்படும் கோடைவிடுமுறை காரணமாக ஏற்படும் கூட்டத்தை சமாளிக்க சிறப்பு ரயில்கள் ஏற்படுதப்படுகிறது.
சிறப்பு ரயில்கள்
கோடை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06070) ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலிசிறப்பு ரயில் (06069) ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பயண சீட்டு முன்பதிவு
இந்த ரயில்களில் 1 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN CM MK Stalin: பதில் சொல்லுங்க மோடி! பிரதமருக்கு 18 வாக்குறுதிகளுக்கு கேரண்டி கேட்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - CM MK Stalin: வாக்கிங்கில் வாக்கு சேகரிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து உற்சாகமான தேனி மக்கள்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion