மேலும் அறிய
Advertisement
Special Bus: பள்ளிகள் திறப்பு, புத்தாண்டு கொண்டாட்டம்; மதுரை போக்குவரத்து கழகம் சார்பில் 550 சிறப்பு பேருந்துகள்
முக்கிய ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் அரையாண்டு விடுமுறைகள் விடப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அல்லது சுற்றுலாவிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். புத்தாண்டு பிறக்க உள்ள நிலையிலும், பள்ளி விடுமுறை முடிவடைய உள்ள நிலையிலும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். எனவே, சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
550 சிறப்பு பேருந்துகள்:
எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை)லிட்., மதுரை போக்குவரத்து கழக மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் 550 சிறப்பு பேருந்துகள் 31.12.2022 முதல் 03.01.2023 வரை மதுரை. திண்டுக்கல் தேனி, பழனி விருதுநகர், அருப்புக்கோட்டை சிவகாசி, ராஜபாளையம், ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து திருச்சி, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர், கம்பம், குமுளி மற்றும் சென்னை போன்ற முக்கிய ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்களின் வசதியை முன்னிட்டு தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. எனவே பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும். பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டீ தூள் தயாரிப்பு - 2 பேர் கைது; 400 கிலோ டீ தூள் பறிமுதல்
மேலும் செய்திகள் படிக்க - மு.க அழகிரியை சந்தித்து சால்வை அணிவித்த நிதி அமைச்சரின் ஆதரவாளரால் பரபரப்பு - திமுகவில் மீண்டும் முக அழகிரியின் கை ஓங்குகிறதா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion