பொலிட்டிக்கல் த்ரில்லரில் விக்ரம் பிரபு , அனுஷ்கா..கவனமீர்க்கும் காட்டி படத்தின் டிரெய்லர்
Ghaati Trailer : விக்ரம் பிரபு மற்றும் அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடித்துள்ள காட்டி படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது

அனுஷ்கா நடித்துள்ள காட்டி பட டிரெய்லர்
சுந்தர் சி இயக்கிய 'ரெண்டு' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானர் அனுஷ்கா. விஜயின் வேட்டைக்காரன் , சூர்யாவின் சிங்கம் ஆகிய இரு படங்கள் அனுஷ்காவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய மார்கெட் ஏற்படுத்திய படங்கள். தமிழைக் காட்டிலும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். அருந்ததி படத்தில் சோலோவாக நடித்து ஸ்டாரானார். அவரது கரியரரை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக அமைந்தது பாகுபலி . இப்படத்திற்கு பின் அவருக்கு பெரியளவில் படவாய்ப்புகள் வரவில்லை. கடந்த ஆண்டும் அனுஷ்கா நடித்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்டம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது அனுஷ்கா நடித்துள்ள புதிய படமான காட்டி படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனமீர்த்துள்ளது.
செகண்ட் ஹீரோவாக விக்ரம் பிரபு
கிரீஸ் ஜாகர்லமூடி இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள புதிய படத்தின் பெயர் காட்டி. கிரீஷ் ஏற்கனவே தெலுங்கில் வேதம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தமிழில் சிம்பு நடித்த வானம் என ரீமேக் செய்யப்பட்டது. விக்ரம் பிரபு இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பின் மாறுபட்ட ஒரு கதையில் அனுஷ்கா நடித்துள்ளார். பழங்குடி மக்களுக்கு எதிரான அரசு மற்றும் கார்பரேட் அடக்குமுறைகளையும் அதை எதிர்த்து போராடும் கணவன் மனைவியின் கதையே காட்டி படத்தின் கதை. அனுஷ்காவும் , விக்ரம் பிரபுவும் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்கள். அனுஷ்காவுக்கு இப்படம் ஒரு நல்ல கம்பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஃபீமேல் லீட் படங்களில் செகண்ட் ஹீரோவாக இன்றைய ஸ்டார்கள் நடிக்கும் யோசிக்கையில் விக்ரம் பிரபு செகண்ட் ஹீரோவாக நடிக்க முன்வந்துள்ளதற்கு ரசிகர்களை அவரை பாராட்டி வருகிறார்கள்.





















