"Speed Speed Speed வேணும்" சோதனை ஓட்டத்தில் அடித்து தூக்கிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடந்துள்ளது. மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பார்த்து அதிகாரிகளே வியந்துள்ளனர்.
சோதனை ஓட்டத்தின்போது, மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில், படுவேகமாக செல்லும் வீடியோவை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
சோதனை ஓட்டத்தில் கலக்கிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்:
இந்திய ரயில்வே தனது தோற்றத்தையும் அணுகுமுறையையும் முற்றிலும் மேம்படுத்தி வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற நவீன மற்றும் விரைவு ரயில் சேவையை தொடங்கியுள்ளது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது தவிர பொதுமக்களின் வசதிக்காக அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். இது தவிர வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடந்துள்ளது. மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பார்த்து அதிகாரிகளே வியந்துள்ளனர்.
இதுதொடர்பான காணொளியை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். பயணிகள் சேவைக்கு விடுவதற்கு முன்பு வரை அதாவது இந்த சோதனை ஓட்டம் இந்த மாத இறுதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில்களின் சில சிறப்பம்சங்கள்:
- கவாச் பொருத்தப்பட்டது.
- தீ பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணக்கமான ரயில்.
- ஆற்றல் செயல்திறனுக்கான மீளுருவாக்க பிரேக்கிங் சிஸ்டம்.
- அதிக சராசரி வேகம்.
- அவசர காலங்களில் பயணிகள் - ரயில் மேலாளர் / லோகோ பைலட் இடையேயான தகவல்தொடர்புக்கான அவசர பேச்சு-பேக் யூனிட்.
- ஒவ்வொரு முனையிலும் ஓட்டுநர் பெட்டிகளில் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம் (பிஆர்எம்) கொண்ட பயணிகளுக்கான தங்குமிடம், அணுகக்கூடிய கழிப்பறைகள்.
- அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்.
2024 டிசம்பர் 02 நிலவரப்படி, 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 16 வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.