Morning Headlines: கலைஞரின் 101-வது பிறந்தநாள்.. அமலுக்கு வந்தது புதிய சுங்கக் கட்டணம்.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines June 3: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தலைப்புச் செய்திகளின் தொகுப்பாக காணலாம். முக்கியமான செய்திகளின் லிங்க்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- மக்களவை தேர்தல் வரலாறு - குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் யார்? டாப் 10 லிஸ்ட்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரலாற்றில் இதுவரை, மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 10 பேர்ன் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. 543 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இதுவரை நடைபெற்றுள்ள மக்களவை தேர்தலில், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் வெற்றிக்கு ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு அவசியம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. மேலும் படிக்க..
- அஞ்சுகத்தாயின் மைந்தன் மட்டுமல்ல : கலைஞருக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நினைவுகளையும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கண்ட கனவுகளையும், தாங்கள் செய்யும் சாதனைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், “தலைவரென்பார், தத்துவ மேதை என்பார், நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார்,சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார், மனிதரென்பார், மாணிக்கமென்பார், மாநிலத்து அமைச்சரென்பார், அன்னையென்பார், அருமொழிக் காவலர் என்பார், அரசியல்வாதி என்பார் - மேலும் படிக்க..
- நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது புதிய சுங்கக் கட்டணம் - ஒவ்வொரு வாகனத்திற்கும் எவ்வளவு தெரியுமா?
நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், நள்ளிரவு முதல் புதிய சுங்கக் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கக்கட்டணம் ரூபாய் 5 முதல் ரூபாய் 20 வரையிலும், மாதாந்திர சுங்கக்கட்டணம் ரூபாய் 100 முதல் ரூபாய் 400 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக, பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.70, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.110, மாதாந்திர கட்டணம் ரூ.2,395 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக 235 தொகுதிகளுக்கு மேல், வெற்றி பெறாது என காங்கிரஸ் கட்சி ஆருடம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, கடைசி கட்டமாக ஜுன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வரும் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட உள்ளன. இதனிடயே, பல முன்னணி நிறுவனங்களுக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில் பெரும்பாலானாவை பாஜகவிற்கு மேலும் படிக்க..
- மூத்த குடிமக்களுக்கு 7.90% வட்டி - எஸ்பிஐ வங்கியின் சர்வோத்தம் FD திட்டம் பற்றி தெரியுமா?
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்காக சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, எஸ்பிஐயின் சர்வோத்தம் திட்டம், மூத்த குடிமக்களின் சேமிப்பிற்கு 7.90 சதவிகித வட்டியை வழங்குகிறது. இது அரசு நடத்தும் பல திட்டங்களுக்கான வட்டியை விட அதிகமாகும். இத்திட்டம் சில விதிகளைக் கொண்டிருந்தாலும், மூத்த குடிமக்கள் அதிக வருமானம் ஈட்டுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். மேலும் படிக்க..