மேலும் அறிய

Tirumala Tirupati: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கள்ளச்சந்தை டிக்கெட்.. அதிர்ச்சி தகவல்!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டெலிகிராமில் டிக்கெட்கள் விற்பனை என்று தகவல்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்கள் டெலிகிராம் குரூப் மூலம் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வந்தால் வாழ்க்கையில் திருப்பம் எற்படும் என்று நம்பப்படுவதுண்டு. அப்படி, திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்ததில்லை. கடந்த புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

 அதிக கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வரும் சூழல் இருப்பினும், பல மணி நேர காத்திருப்பிற்கு பிறகு தெய்வத்தின் அருள் கிடைக்கிறது என்ற திருப்தியுடன் பக்தர்கள் நினைப்பதுண்டு. திருப்பதி வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம். இதற்காகு டோக்கன் பெறுவதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்துவந்தது. பக்தர்களின் சுமையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், டோக்கன்களை வரிசையில் நின்று வாங்குவதற்கு பதிலாக, ஆன்லைனில் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதற்கு சிறப்பு தரிசன டிக்கெட்களும் உண்டு. திருப்பதி ஏழுமலையானை பொது தரிசனம், அல்லது சிறப்பு தரிசனம் இல்லாமல் சாதரண வழிபட விரும்பும் பயணம் மேற்கொள்ளும் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னரே, மாதங்களுக்கு முன்னரே டிக்கெட் பதிவு செய்ய வேண்டும்.   பக்தர்கள் ஆன்லைனில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட பின் ஓரிரு மணி நேரத்திற்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும், அல்லது திருப்பதி மலைக்கு நேரடியாகச் சென்று நாள் கணக்கில் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். இதுதான் வழக்கமாக இருக்கிறது. 

இந்நிலையில், டெலிகிராம் செயலியில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான டிக்கெட்களை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தில் வி.ஐ.பி.களுக்கு தனியே டிக்கெட்கள் இருக்கின்றன. மேலும், பொது தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி வரும் என்பதால் ரூ.300 டிக்கெட்களை வாங்கி பக்தர்கள் தரிசனம் செய்வர். மேலும், திருப்பதி கோயில், தேவஸ்தான அலுவலகத்தில் தெரிந்தவர்கள் இருந்தால் நினைத்த நாட்களில் ஏழுமலையானை தரிசிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

சில வேளைகளில், டிக்கெட் கிடைக்காமல் போகும். அப்படியிருக்க, டிக்கெட் கிடைக்காத சூழலில்,  இந்த டிக்கெட்டுகளை ஒரு சிலர் டெலிகிராமில் குழு ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்து வருதாக கூறப்படுகிறது. 300 ரூபாய் டிக்கெட்டுகளை அதிகபட்சமாக ஆயிரத்து 500 ரூபாய் வரையில் டெலிகிராம் குரூப் மூலம் விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிரத் திருப்பதி மலையில் தங்குவது, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும்  ஒரு குழுவினர் ஏற்பாடு செய்து கொடுப்பதாக கூறப்படுகிறது.  திருமலை தரிசனம் டிக்கெட்ஸ் என்ற பெயரில் செயல்படும் டெலிகிராம்  குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. திருப்பதி தேவஸ்தானம் கூடுதலாக டிக்கெட் தேவை என்றால் கூட வழங்க மறுக்கும். ஆனால், இப்போது பிளாக் டிக்கெட் விற்பனை டெலிகிராம் குழு மூலம் விறுவிறுவென நடைபெற்று வருகிறது என்பது அதிர்ச்சியை எற்படுத்தில் உள்ளது.

மேலும் வாசிக்க..

Arranging Hair : நீதிமன்றத்தில் முடியை சரிசெய்ய பெண் வழக்கறிஞர்களுக்கு கட்டுப்பாடா..? என்ன நடக்கிறது?

'கல்யாணம்னா தீமையா? மனைவினாலே கஷ்டமா?' விவாகரத்து வழக்கில் கொந்தளித்த நீதிபதிகள்!

Diwali Muhurat Trading: தீபாவளியொட்டிய முகூர்த்த வர்த்தகம்: ஏற்றத்துடன் தொடங்கியது பங்குச் சந்தை..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget