Delhi School Reopen: மூச்சுவிட திணறும் டெல்லி.. இப்போ கொஞ்சம் பரவாலையாம்! நாளை முதல் பள்ளிகள் திறப்பு..
டெல்லியில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொட்ங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. இது இந்த ஆண்டு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் வெளியொடப்பட்ட தரவுகளின் படி உலகளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவை இடம்பெற்றுள்ளது. நாட்டின் முக்கிய முக்கிய நகரங்களில் கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக காற்றின் தரத்தை கண்காணிக்கும் IQAir தகவல் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் மோசமான புகை மூட்டத்தால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளே டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் காற்று மாசுபாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
டெல்லியில் காற்று தரக்குறியீடு 300 புள்ளிகளை தாண்டியே காணப்பட்டது. 300க்கு மேல் இருந்தால் அது சுவாசிக்க ஏதுவானது அல்ல என்பது பொருள். இதன் காரணமாக டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்துள்ளதால் நாளை முதல் அனைத்து அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் நாளை முதல் செயல்படும் என அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிப்புற நடவடிக்கைகள் (sports activities, assembly) அடுத்த ஒரு வார காலத்திற்கு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வாரம் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உலகின் மாசுப்பட்ட நகரங்களில் டெல்லி இடம்பெற்றுள்ளது. டெல்லிக்கு அடுத்தப்படியாக, பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சி நகரங்கள் மாசுபட்ட நகரங்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் மும்பையும் கொல்கத்தாவும் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. டெல்லியில் கடந்த 8 ஆண்டுகளை ஒப்பிடுகையில் தீபாவளியன்று காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளது.
காற்றின் தரக் குறியீடு, பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்டிருந்தால் நல்லதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 51 மற்றும் 100க்கு இடையே இருந்தால் அது திருப்திகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 101 மற்றும் 200க்கு இடையே இருந்தால் அது மிதமானதாகவும், 201 மற்றும் 300க்கு இடையே இருந்தால் அது மோசமானதாகவும் கருதப்படுகிறது.
301 மற்றும் 400க்கு இடையே இருந்தால், அது மிக மோசமானதாக கருதப்படுகிறது. 401 மற்றும் 450க்கு இடையே இருந்தால் அது கடுமையானதாகவும் 450க்கு மேல் இருந்தால் மிக கடுமையானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ரூ 100 கோடி.. உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா? ஆஸ்ட்ரோடாக் பயனாளர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்
IND vs AUS Final 2023: “உலகக்கோப்பை இறுதிப்போட்டியை உடனே நிறுத்தணும்” - காலிஸ்தான் ஆதரவாளர் மிரட்டல்