மேலும் அறிய
Top 10 News Headlines: பெட்ரோலுக்கு அலைமோதும் மக்கள்.. டென்ஷனான விஜய்.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines Today March 12th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

இந்தியா செய்திகள்
Source : ABPLIVE AI
- அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என தகவல் பரவியதால் நள்ளிரவு முதல் பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
- அரசு போக்குவரத்துக் கழகங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை. சென்னையில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சிலிண்டர் தட்டுப்பாட்டால் ரயில்களில் வழங்கப்படும் உணவு நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல் என ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. உணவோடு சேர்த்து முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
- தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் முதலமைச்சர் செலுத்தி வருகிறார் என தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.1,200 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,970க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.1,19,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம், பரப்ப வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
- லெபனான் மற்றும் கத்தாரில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 600 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டனர். மேலும் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் எரிபொருள் விநியோகம் கட்டுப்பாட்டில் உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை விளக்கம் கொடுத்துள்ளது. 2 கச்சா எண்ணெய் சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வருவதற்கு ஈரான் அனுமதியளித்துள்ளது.
- தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ஆர்.வி.ஆர்லேகர் இன்று பதவியேற்கிறார். உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா்.
- திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 3 தொகுதியில் உதயசூரியன், ஒரு தொகுதியில் தனிச்சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது.
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மக்கள் அச்சமின்றி வாழ முடியும். எதிர்வரும் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியம் வாய்ந்தது. நாம் அனைவரும் இணைந்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
- 2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 28ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















