மேலும் அறிய

IND vs AUS Final 2023: “உலகக்கோப்பை இறுதிப்போட்டியை உடனே நிறுத்தணும்” - காலிஸ்தான் ஆதரவாளர் மிரட்டல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று (நவம்பர் 19) குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நிறுத்துமாறு தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி( எஸ்.எப்.ஜே) அமைப்பின் தலைவரான குர்பத்வந்த்சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் 2023 ஆம் ஆண்டுக்கான 15வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் இந்த உலகக்கோப்பையில் கலந்து கொண்டது. இதில் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. 

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தியும், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை வென்றும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று (நவம்பர் 19) குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண அஹமதாபாத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். 

மேலும் இறுதிப்போட்டியை காண பிரதமர் மோடி, வெளிநாட்டு தூதர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் என பலரும் நரேந்திர மோடி மைதானத்துக்கு வருகை தர உள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

மேலும் மைதானத்தில் கண்கவர் நிகழ்ச்சிகள், விமானப்படையினரின் சாகசங்கள், லேசர் ஷோ உள்ளிட்ட பல நிகழ்வுகளும் ரசிகர்களுக்கு கண்களுக்கு விருந்து படைக்க உள்ளது.இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 3வது முறையாக உலகக்கோப்பையை கையில் ஏந்த இந்திய அணி முனைப்புடன் உள்ளது. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் போட்டியை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இப்படியான நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டியை நிறுத்த வேண்டுமென  தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி( எஸ்.எப்.ஜே) அமைப்பின் தலைவரான குர்பத்வந்த்சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பான வீடியோவில், ‘இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெறும் போரில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி பேசியுள்ளார். மேலும் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, 2002 ஆம் ஆண்டின் குஜராத் கலவரம் பற்றியும் பேசியுள்ளார்’

குர்பத்வந்த்சிங் பன்னுன் வீடியோ வெளியிடுவது இது முதல்முறையல்ல .ஏற்கனவே உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியை முன்னிட்டு இருநாட்டுக்கும் பகையை தூண்டும் வகையில் பேசியதாக அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்படியான நிலையில்   குர்பத்வந்த்சிங் பன்னுன் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: IND vs AUS Final Score LIVE: பகையுடன் காத்திருக்கும் இந்தியா..? பதம் பார்க்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா.. வெற்றி யாருக்கு..?

தலைப்பு செய்திகள்

Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget