News Today LIVE | டெல்லி இந்திய கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறக்கப்படும் - பிரதமர் மோடி
இன்றைய தினத்தின் முக்கிய அரசியல்,சமூக நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்
LIVE
Background
அஇஅதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திரு கே பி அன்பழகன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் பல்வேறு பொருள்களும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் இரண்டு கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாய், சுமார் 6.63 கிலோ தங்க நகைகள், 13.8 5 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கணக்கில் காட்டப்படாத ரூ.2.65 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, அரசியல் காழ்ப்புணர்சியின் காரணமாக திமுக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அஇஅதிமுக குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
டெல்லி இந்திய கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறக்கப்படும் - பிரதமர் மோடி
டெல்லி இந்திய கேட் பகுதியில் கிரானைட்டால் ஆன நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
முன்னதாக, குஜராத் மாநிலம் சோம்நாத் ஆலயத்தின் அருகே புதியதாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
We were the first nation in the world to administer a vaccine, and one of the fastest in Europe to roll it out.
— Boris Johnson (@BorisJohnson) January 20, 2022
We kept open this winter while others locked down.
And we’re the first to emerge from Omicron because we delivered the fastest booster campaign in Europe. pic.twitter.com/TdBegwsONO
இங்கிலாந்தில் விதிக்கப்பட்டிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மதுரை சங்ககால நகரமாக இருந்தாலும் நவீன மதுரையாக மாற்றியது திமுக அரசுதான் - முதல்வர் ஸ்டாலின்
மதுரை சங்ககால நகரமாக இருந்தாலும் நவீன மதுரையாக மாற்றியது திமுக அரசுதான் - முதல்வர் ஸ்டாலின்
மீனாட்சியம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் குடமுழுக்கு - முதல்வர் ஸ்டாலின்
மீனாட்சியம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் குடமுழுக்கு - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோரைக் கட்டுபடுத்தாவிட்டால் அமைதி சீர்குலையும் - ரவிக்குமார் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோரைக் கட்டுபடுத்தாவிட்டால் அமைதி சீர்குலையும். சட்டம் ஒழுங்கு கெடும். 2017 இல் இந்திய சட்ட ஆணையம் தயாரித்தளித்த மசோதாவை சட்டமாக்கத் தமிழ்நாடு அரசு
முன்வரவேண்டும் என விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.