Vidaamuyarchi OTT Release: மிட் நைட்டில் ரீலீசாகுது அஜித்தின் விடாமுயற்சி! எந்த ஓடிடி? டோண்ட் மிஸ் இட்..!
Vidaamuyarchi OTT Release: அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி படம் ஓடிடியில் இன்று நள்ளிரவு ரிலீசாகிறது. திரையரங்கில் இந்த படத்தைப் பார்க்காத ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித்குமார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் துணிவு படத்திற்குப் பிறகு சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான படம் விடாமுயற்சி.
விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ்:
பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 6ம் தேதி ரிலீசானது விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான இந்த படம் வழக்கமான அஜித்தின் ஆக்ஷன் படமாக இல்லாமல் காணாமல் போன மனைவியைத் தேடும் கணவனைப் பற்றிய படமாக இருந்தது.
இந்த படம் நெட்ப்ளிக்ஸில் மார்ச் 3ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, இன்றிரவு விடாமுயற்சி படம் நெட்ஃப்ளிக்ஸில் ரிலீசாகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாகிறது.
விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அர்ஜுன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ரவி ராகவேந்திரன், ஜீவா ரவி, ரம்யா, விதாதி, காசிம் ஆகியோரும் நடித்திருந்தனர்.
ப்ரேக்டவுன் தழுவல்:
ஹாலிவுட்டில் வெளியான ப்ரேக்டவுன் படத்தின் தழுவலாக உருவான இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.பி.ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது.
ரசிகர்கள் ஆர்வம்:
முழுக்க முழுக்க அஜர்பைஜானில் நடப்பது போலவே இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. விடாமுயற்சி படத்தை திரையரங்கில் காண இயலாத ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
கடந்த மாதம் விடாமுயற்சி படம் வெளியான நிலையில், வரும் ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீசாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் ரிலீசாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

