ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் திருநங்கை..யார் இவர் ?
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச 97 ஆவது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான பிரிவில் ஸ்பானிய நடிகையான கார்லா சோஃபியா காஸ்கா நாமினேட் ஆகியுள்ளார்

ஆஸ்கர் 2025
உலக புகழ்பெற்ற ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் 3 ஆம் தேதி லாஸ் எஞ்சலஸில் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு அதிக பிரிவுகளின் கீழ் நாமினேட் செய்யப்பட்டு கவனமீத்துள்ள படம் ஜாக்ஸ் ஆடியர்ட் இயக்கிய எமிலியா பெரஸ் என்கிற ஸ்பானிய திரைப்படம். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கார்லா சோஃபியா காஸ்கா என்கிற திருநங்கை சிறந்த நடிகைக்கான பிரிவின் கீழ் நாமினேட் ஆகி வரலாறு படைத்துள்ளார்.
எமிலியா பெரஸ்
மெக்ஸிகோவைச் சேர்ந்த பிரபல கேங்ஸ்டர் ஒருவன் ஒரு வழக்கறிஞரின் உதவியுடன் தனது பாலினத்தை மாற்றிக் கொள்கிறார். மிகப்பெரிய கேங்க்ஸ்டராக நூற்றுக்கணக்கான உயிர்களை கொன்ற ஒருவன் ஒரு பெண்ணாக தனது பாலினத்தை மாற்றிக் கொண்டபின் மற்றவர்களுக்கு உதவி செய்பவளாகவும் இரக்க குணம் கொண்டவனாகவும் மாறுகிறார். அடுத்தடுத்த நிகழ்வுகளை த்ரில்லர் பாணியில் கதை சொல்லியிருப்பதும் உணர்ச்சிகளை வசனங்களாக இல்லாமல் பாடல்களாக சொல்லியிருப்பதும் இப்படத்திற்கு சினிமா ஆர்வலர்களிடம் சிறப்பு கவனத்தைப் பெற்று தந்துள்ளது. அதே போல் இதில் நடித்த கார்லா சோஃபியா காஸ்காவின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
யார் இந்த கார்லா சோஃபியா காஸ்கா
ஆஸ்கர் விருதுகளுக்கு சிறந்த நடிகைக்கான பிரிவில் திருநங்கை ஒருவர் தேர்வாவது இதுவே முதல்முறை. எமிலியா பெரஸ் படத்திற்கும் கார்லா சோஃபியா காஸ்காவின் கதையும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. தனது சிறு வயதில் இருந்தே நடிகராக வேண்டும் என்கிற இருந்த கார்லா சோஃபியா காஸ்கா திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பயிற்சிக்கு பட்டம் பெற்றார். பின் லண்டன் சென்று குழந்தைகளுக்கான மொழி கற்றல் நிகழ்ச்சியில் பணியாற்றினார். ஸ்பானிஷ் தொலைக்காட்சித் தொடர்களில் வேலை செய்து பின் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பின் 2018 ஆம் ஆண்டு தனது பாலினத்தை மாற்றிக் கொண்டார்.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் அதிகம் பேசப்படக் கூடிய ஒருவரில் கார்லா சோஃபியா காஸ்கா இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்

