Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் இன்று 1808 பேருக்குக் கொரோனா உறுதி
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் 144219 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1808 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1808 பேருக்குக் கொரோனா உறுதி
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1808 ஆக உள்ளது.சென்னையில் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்றைய கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 22. அரசு மருத்துவமனையில் 19 பேரும் தனியார் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 1819 பேருக்குக் கொரோனா உறுதி
தமிழ்நாட்டில் இன்று 1819 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இன்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2583. சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 24025.
தமிழ்நாட்டில் இன்று 1830 பேருக்குக் கொரோனா உறுதி
தமிழ்நாட்டில் இன்று 1830 பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்
தமிழ்நாட்டில் இன்று 1872 பேருக்கு கொரோனா உறுதி
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 872 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,45,584 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,872 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 43 ஆயிரத்து 40 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 756 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 133 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 133 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 29 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,838 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் இன்று 1,843 பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். 23,571 பேர் சிகிச்சை பெற்ரு வருகின்றனர்.