Watch Video : மிளகு ஸ்ப்ரே.. ஏடிஎம் வங்கியில் வாடிக்கையாளரை தாக்கி ரூ.7 லட்சம் கொள்ளை ... விரைந்து செயல்பட்ட போலீசார்...
ஹைதராபாத்தில் ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்தும் இயந்திரத்தில் பணம் செலுத்திக் கொண்டிருந்த நபரிடம் இருந்த 7 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் கடந்த 14-ஆம் தேதி, பணம் செலுத்தும் இயந்திரம் மூலம் பணம் செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இருவர் அந்த ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்தனர். அதில் ஒருவன் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில் மற்றொருவன் முகக்கவசம் அணிந்திருந்தான். அந்த இரண்டு கொள்ளையர்களும் அந்நபரின் முகத்தில் தாங்கள் கொண்டு வந்த பெப்பெர் ஸ்ப்ரேவை அடித்து அவரை தாக்கினர். அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் தன் பணத்தை விடாமல் கொள்ளையர்களுடன் தொடர்ந்து போராடினார். கொள்ளையர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே சில நிமிடம் போராட்டம் நீடித்த நிலையில், முதலில் ஒரு கொள்ளையன் அந்த நபரிடம் இருந்து சிறிது பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நிலையில் மற்றொரு கொள்ளையன் மீதம் பணத்தை பறித்துக் கொண்டு ஏடிஎம் மையத்தில் இருந்து வெளியே ஓடினான். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
#WATCH | Hyderabad Commissioner’s Task Force, along with the Domalguda Police apprehended four people involved in a Punjab National Bank ATM robbery on July 3.
(CCTV footage of the incident confirmed by Police) pic.twitter.com/DRctQQchKC— ANI (@ANI) July 15, 2023
பணத்தை பறிகொடுத்த நபர், தன்னுடைய 7 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக அளித்த புகாரின் பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 4 பேர் கொள்ளையர்களாக அடையாளம் காணப்பட்டனர். தான்சிப் அலி (24), முஹம்மது சஹாத் (26), தன்சீ பாரிக்கால் (23) மற்றும் அப்துல் முஹீஸ் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கொள்ளையர்களிடம் இருந்து ஒரு நான்கு சாக்கர வாகனம், 3.25 லட்சம் பணம், பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Hyderabad | On July 14, Hyderabad Commissioner’s Task Force, along with the Domalguda Police apprehended four people involved in a Punjab National Bank ATM robbery on July 3. The accused plundered away Rs.7 lakh from the victim/complainant while he was depositing cash in PNB ATM.… pic.twitter.com/1Y4Q5JAVnu
— ANI (@ANI) July 15, 2023
மேலும் படிக்க,

