Uddhav Thackarey : கேமரா முன்பு உத்தவ் தாக்கரேவுக்காக கதறி கதறி அழுதுவிட்டு...நம்பிக்கை வாக்கெடுப்பில் பல்டி அடித்த எம்எல்ஏ
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஒரு நாள் இரவுக்கு முன்பு உத்தவ் தாக்கரே ஆதரவு எம்எல்ஏ ஒருவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றிபெற்றுள்ளது. முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஒரு நாள் இரவுக்கு முன்பு உத்தவ் தாக்கரே ஆதரவு எம்எல்ஏ ஒருவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு வாரத்திற்கு முன்புதான், இவர் பொது மக்கள் முன்பு உத்தவ் தாக்கரேவுக்காக கதறி கதறி அழுதார்.
आज मतदारसंघांमध्ये परत आल्यानंतर उपस्थित शिवसैनिकांना संबोधित करताना अश्रू अनावर झाले....शेवटच्या श्वासापर्यंत आदरणीय शिवसेना पक्षप्रमुख #उद्धव_ठाकरे साहेबा सोबत. @ShivSena @AUThackeray pic.twitter.com/loMHpUI4cL
— आमदार संतोष बांगर (@santoshbangar_) June 24, 2022
மகாராஷ்டிர புதிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் தங்கியுள்ள விடுதிக்கு நேற்று நள்ளிரவு சென்ற சந்தோஷ் பங்கர், அதிகாரப்பூர்வமாக எதிரணியில் இணைந்தார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி தூக்கிய ஏக்நாத் ஷிண்டே, அவரது அரசை கவிழ்த்து பாஜகவுடன் இணைந்து புதிய அரசை அமைத்து உள்ளார். ஜூன் 24 அன்று, அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவிடம் சேருவதைத் தடுக்க உத்தவ் தாக்கரே போராடி கொண்டிருந்தார்.
அப்போது, சந்தோஷ் பங்கர், தனது தொகுதியில் உள்ள மக்கள் முன்பு தாக்கரேவுக்கு ஆதரவாக கைகளைக் கூப்பி வணங்கி அவர்களிடம் உரையாற்றும் வீடியோவை வெளியிட்டார்.
அதில், உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் ஏக்நாத் ஷிண்டே விரைவில் திரும்பி வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அப்போது, அருகில் இருக்கும் ஒருவர் கைக்குட்டையை கொண்டு அவரின் கண்ணீரை துடைக்கிறார். "உத்தவ் தாக்கரே அவர்களே, உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்" என சந்தோஷ் கத்த, கூடியிருக்கும் மக்கள் கரகோஷம் எழுப்புகின்றனர்.
ஆனால், இன்று காலை, ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக சந்தோஷ் வாக்களித்தார். கடைசி நிமிடத்தில், மற்றொரு எம்எல்ஏ சியாம்சுந்தர் ஷிண்டேவும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். 286 வாக்குகளில் 164 வாக்குகள் பெற்று ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்