டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலால் 18 பேர் உயிரிழப்பு: காரணம் என்ன? காவல்துறை விளக்கம்..
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலையத்தில், ரயில்களின் பெயர்கள் குறித்த குழப்பமானது நெரிசலுக்கு வழிவகுத்ததாகவும், குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி ரயில் நிலையத்தில், கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக சோகமான நிகழ்வானது நிகழ்ந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக பிரயாக்ராஜ் செல்லும் இரண்டு ரயில்களின் பெயர்களில் ஏற்பட்ட குழப்பம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதாவது , பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில்களின் பெயர்களால் குழப்பம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
காவல்துறை சொன்னது என்ன?
14 மற்றும் 16 பிளாட்பாரங்களில் பிரயாக்ராஜ் என்று தொடங்கும் ஆரம்பப் பெயர்களைக் கொண்ட இரண்டு ரயில்கள் பயணிகளைக் குழப்பியதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து டெல்லி காவல்துறை தெரிவித்ததாவது, பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ஏற்கனவே பிளாட்ஃபார்ம் 14 இல் இருந்தது, பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில், பிளாட்ஃபார்ம் 16 க்கு வர திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் பிளாட்ஃபார்ம் 16க்கு வந்து கொண்டிருண்திருக்கிறது. அப்போது, பிளாட்பார்ம் 16ல் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் வந்து கொண்டிருக்கிறது என அறிவிப்பு வெளியாகியது. அப்போது பிளாட்ஃபார்ம் 14ல் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் குழப்பம் அடைந்து, பிளாட்ஃபார்ம் 16க்கு வந்துவிட்டனர். இதனால், கூட்டம் அதிகமாகி நெரிசல் ஏற்பட்டது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொது டிக்கெட்டுகள் அதிகளவு விற்பனை
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ்-ல் நடந்து வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக, அதிக மக்கள் ரயில்களுக்காக மக்கள் காத்திருந்ததால், புது தில்லி ரயில் நிலையம் சனிக்கிழமை பெரும் கூட்டத்தைக் கண்டது. நெரிசல் ஏற்பட்டபோது, பிரயாக்ராஜுக்கு மேலும் நான்கு ரயில்கள் திட்டமிடப்பட்டன, அவற்றில் மூன்று தாமதமானதால் எதிர்பாராத கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்றும் டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 1,500 பொது டிக்கெட்டுகள் விற்றதால், ரயில்வே ஸ்டேஷனில் ஏற்கனவே இருக்கும் கூட்டத்தை அதிகரித்து, ரயில் நிலையத்தில் கூட்டமானது மேலும் அதிகமாக இருந்தது.
கட்டுப்படுத்த முடியாத கூட்டம்:
மேலும், அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்வதந்த்ரா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் ரயில் நிலையத்தில் ஏற்கனவே கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த இரண்டு ரயில்களின் பயணிகளும் 13 மற்றும் 14 நடைமேடைகளில் இருந்தனர். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கூடுதலாக 1,500 பொது டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதால், ஸ்டேஷனில் கூட்ட நெரிசல் அதிகமாகி, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு, ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

