Sunita Williams: பூமிக்கு வந்தால் பென்சிலை தூக்குவதே கஷ்டம்..சுனிதா வில்லியஸ் எப்போது பூமி வருகிறார்? சிக்கல்கள் என்ன?
Sunita Williams Return Earth: சுனிதா வில்லியம்ஸ் வரும் மார்ச் 19 ஆம் தேதி விண்வெளியில் இருந்து பூமி திரும்ப வரவுள்ள நிலையில், புவியீர்ப்பு விசை மிக சவாலனதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) , எட்டு மாதங்களுக்கும் மேலாக புவியீர்ப்பு குறைவான இடத்தில் இருந்துவிட்டு, பூமிக்கு வந்தடையும் போது புவி ஈர்ப்பு விசையால், கடினமான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா:
பூமியில் இருந்து, சுமார் 400 கி,மீ உயரத்தில், சர்வதேச விண்வெளி நிலையமானது, பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. ஒரு நாளில் சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வரும். அங்கு விண்வெளி வீரர்கள் சென்று தங்கி , விண்வெளி தொடர்பான பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களை சோதனை செய்யும் வகையில் இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது.
முதலில் சுமார் எட்டு நாட்கள் பயணம் என்று திட்டமிடப்பட்ட நிலையில், விண்கலத்தின் இன்ஜினில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக, பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, சிக்கல்களை சரி செய்ய போயிங் மற்றும் நாசா தீவிரமாக முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதனால், விண்வெளி வீரர்கள் இல்லாமல், தனியாக ஸ்டார்லைனர் விண்கலம் பூமியை வந்தடைந்தது.

எலான் மஸ்க் விண்கலம்:
இதன் விளைவாக, அவர்களை பூமிக்கு கொண்டு வர எலான் மஸ்க்கிஸ்ர்க்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலமானது, கடந்த ஆண்டு இறுதியில் விண்வெளிக்குச் சென்றது. இதன் மூலம் வில்மோர் மற்றும் வில்லியம்சுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்தது. இவர்கள் 2 பேரும் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பூமி திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தாமதமானது. இந்நிலையில், வரும் மார்ச் மாதம் 19 ஆம் தேதி பூமி திரும்புவார்கள் என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NASA astronauts Sunita Williams and Butch Wilmore, stranded in space for eight months due to an extended mission, are set to return home.
— Northeast Now (@NENowNews) February 15, 2025
The Crew-10 mission will launch on March 12 and bring them back to Earth on March 19, as confirmed in an interview aboard the ISS.… pic.twitter.com/UadBKp5E5W
விண்வெளியில் இருந்து பேட்டி:
இந்த தருணத்தில் , சி.என். என். செய்தி நிறுவனமானது , விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரிடம் நேர்காணல் செய்தது.
வில்மோர் தெரிவிக்கையில் " பூமி திரும்பும் போது புவியீர்ப்பு விசை கடினமானதாக இருக்கும். புவி ஈர்ப்பு விசை எல்லாவற்றையும் கீழ் நோக்கி இழுக்கத் தொடங்கும்; திரவங்கள் கீழே இழுக்கப்படும், மேலும் பென்சிலை தூக்குவது கூட ஒரு உடற்பயிற்சி செய்வது போல் இருக்கும்" என்று வில்மோர் கூறினார்.
சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்ததாவது, “ விண்வெளியில் புவியீர்ப்பு இருக்காது , பூமிக்கு செல்லும் போது, இந்த திடீர் மாற்றம் உடல் அசௌகரியத்தையும், பாரமான உணர்வையும் கொடுக்கும். பூமியின் வாழ்க்கைக்கு ஏற்ப மாறுவது, சில நாட்கள் சவாலானதாக இருக்கும். "அதை மாற்றுவது கொஞ்சம் கடினமாக இருக்கும்," என்று சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.
விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால், எடையை உணராத தனித்துவமான உணர்வுகளை பெற்றிருந்த விண்வெளி வீரர்கள், பூமி வந்தவுடன் இழக்க தொடங்குவார்கள், மேலும், சில நாட்கள் பூமியில் அவர்களது வாழ்க்கைக்கு பழக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என தகவல் தெரிவிக்கின்றன.





















