Indian Army: எல்லைப் பாதுகாப்பில் ட்ரோன்கள் பயன்படுத்த இந்திய இராணுவம் முடிவு!
அவச காலத்தில் உதவும் வகையில், இராணவத்தில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் திறமையாக செயல்பட உதவும் வகையில் ட்ரோன்கள் வாங்க இருப்பதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ முகாம்கள் மற்றும் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தேவையானவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்ல வசதியாக 363 ட்ரோன்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக உயரத்தில் பறக்க கூடிய 163 ட்ரோன்களும், 200 ட்ரோன்கள் குறிப்பிட்ட உயரத்தில் பறக்க கூடிய திறனுடனும் வாங்கப்பட உள்ளதாக இராணுவ, வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவச காலத்தில் உதவும் வகையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட ட்ரோன்கள் 20 கிலோ எடையை தாங்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்றும், மொத்தமாக 100 கிலோ எடையை தாங்கும் அளவுக்கான ட்ரோனுன் வாங்கப்பட உள்ளது.
அதிக உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் குறைந்தது 15 கிலோ எடையை தாங்கும் அளவுக்கு இருக்கும். டெண்டர்களை பதிவு செய்ய நவம்பர் 11 ஆம் தேதி.
ட்ரோனில் தனித்துவமான உற்பத்தி பொருட்கள் 60 சதவீதமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடங்களுக்குள் பறக்கவிட இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக இராணு துறை வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் பல போர் தாக்குதலில் ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது. இந்தியாவும் வெடிப்பொருட்களை உள்ளிட்டவற்றை தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்ல ட்ரோன்களை பயன்படுத்த உள்ளது.
மேலும் வாசிக்க...
Chief Justice Of India : இந்தியாவின் புதிய தலைமை நீதிபதி ஆகிறார் டி.ஒய். சந்திரசூட்..? யார் இவர்?