JSW-யின் புதிய அதிரடி! iCar V23 SUV இந்தியாவில் அறிமுகம்: 20 லட்சத்தில் EV கார்! எதிர்பார்ப்பு எகிறுகிறது!
இந்தியா ஆட்டோமொபைல் துறைக்குள் மிகவும் தாமதமாக வந்த JSW குழுமம் அடுத்தடுத்து கார் அறிமுகம் மூலம் வேகமெடுக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் விண்ட்சர் EV மூலம் பெரும் வெற்றி பெற்ற JSW MG Motor கூட்டணி பெரும் வர்த்தகத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் JSW குழுமம் புதிய கார் மாடலை அறிமுகம் செய்ய புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் இரண்டு புதிய SUVகளை அறிமுகப்படுத்துவதற்காக சீனாவின் Chery Automobile உடன் கடந்த ஆண்டு கூட்டணி அமைத்த JSW குழுமம், விரைவில் புதிய காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளை துவங்கியுள்ளது. இதற்கான மார்கெட்டிங் வேலைகளையும் துவங்கியுள்ளது. இந்திய சந்தையில் தற்போது அனைத்து விதமான கார்களுக்கும் டிமாண்ட் உள்ளது, ஆனால் விலை தான் தற்போதை முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதேபோல் நீண்ட கால பயன்பாடு, பயன்படுத்தும் காலத்தில் நிலையான சேவை தரம் ஆகியவையே முக்கிய பிரச்சனை.
இந்த உணர்ந்த JSW குழுமம் புதிய எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. JSW - Chery மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தம் தற்போது பலன் கிடைக்க உள்ளது. JSW குழுமம் இந்தியாவில் இரண்டு புதிய SUV கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இது செர்ரி-யின் ஜெட்டூர் T2 ஹைப்ரிட் மற்றும் iCar V23 ஆகிய மாடல் தான். முதலாவதாக iCar V23 இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பல செய்தித்தாள்களில் வெளியாகியுள்ள விளம்பரங்களை பார்க்கும் போது JSW குழுமம் அடுத்தாக அறிமுகம் செய்யும் கார் iCar V23 SUV ஆக தான் இருக்க வேண்டும்.
மேலும் சமீபத்தில் iCar V23 கார் இந்திய சாலையில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்களும் வெளியானது. iCar V23 காரின் ஹெட்லைட்-ம் இன்று வெளியான விளம்பரத்தின் ஹெட்லைட்டும் ஒரேமாதிரியாக இருப்பது மூலம் இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம். இந்த 2 கார்களின் அறிமுகம் குறித்த தகவல் ஏற்கனவே வெளியானது என்றாலும், எந்த கார் எப்போது அறிமுகமாகும் என்பது பெரும் கேள்வியாகவே இருந்தது. இந்த iCar V23 கார் ரெட்ரோ-மாடர்ன் ஆஃப்-ரோட் ஸ்டைல் SUV கார இருக்கும்.
இது ஹூண்டாய் க்ரெட்டா EV காரை விடவும் சிறியது. இது JSW-யின் மகாராஷ்டிரா, சத்ரபதி சம்பாஜி நகரில் உருவாக்கப்பட்ட தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். iCar V23 முழு EV கார் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற வாய்ப்பு உள்ளது, குறிப்பாக இந்த கார் 20 லட்சம் விலையில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்ப்பு நிலவும் காரணத்தால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. மேலும் இந்த கார் 360 முதல் 430 வரையிலான ரேஞ்ச்/மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் JSW தனது ஆஸ்தான BAAS மாடலை இந்த காருக்கும் கொண்டு வரலாம். இதோடு விலை, மைலேஜ் ஆகியவை கார் அறிமுகம் செய்யும் போது மாறுபடலாம்.
இதேபோல் இன்றைய விளம்பரத்தில் JSW Motor புதிய டீலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக ஜெட்டூர் T2 ஹைப்ரிட் SUV, மோனோகாக் சேஸிஸ் அடிப்படையிலான பெரிய SUV-ஆக இருக்கும். 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு முன் எலக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட ஸ்ட்ராங் ஹைப்ரிட் சிஸ்டம் உள்ளது. மொத்தம் 221 bhp மற்றும் 390 Nm டார்க் திறன் கொண்டது. 26.7 kWh பேட்டரி பேக் மூலம் ப்யூர் எலக்ட்ரிக் பயணம் 139 கி.மீ. (NEDC சைக்கிள்) கிடைக்கும். விலை சுமார் ரூ.35 லட்சத்தில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி JSW இந்தியாவின் முன்னணி EV மற்றும் ஹைப்ரிட் பிராண்டுகளில் ஒன்றாக மாற்றும்.























