Petrol Diesel Price Hike: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.12 உயர்வு? தேர்தலுக்கு பின் இருக்கப்போகும் நிலவரம் என்ன?
“மார்ச் 7-ம் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம்” - உயர் அதிகாரி தகவல்
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐந்து மாநில சட்டபேரவை தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், 7 கட்டங்களாக நடத்தப்படும் உத்திர பிரதேச மாநில தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நான்கு மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் விலை மாற்றம் இல்லாமல் இருந்து வருவதால், தேர்தலுக்கு பின் விலை உயரும் என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் பதிவிட்டிருக்கும் ட்வீட்டில், “பெட்ரோல் டேங்கை நிறைப்பி கொள்ளுங்கள். மோடி அரசு அறிவித்த தேர்தல் தள்ளுபடி முடிவுக்கு வர இருக்கிறது” என ட்வீட் செய்திருக்கிறார்.
फटाफट Petrol टैंक फुल करवा लीजिए।
— Rahul Gandhi (@RahulGandhi) March 5, 2022
मोदी सरकार का ‘चुनावी’ offer ख़त्म होने जा रहा है। pic.twitter.com/Y8oiFvCJTU
ரஷ்யா - உக்ரைன் மோதலால் எண்ணெய் விலை பேரல் ஒன்று 116 டாலருக்கு விற்பனையாகிறது. ஆனால், இந்த அசாதாரண சூழலிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கோரிக்கை வைத்திருக்கலாம் என தெரிகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என தெரிகிறது.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள உயர் அதிகாரி ஒருவர், “மார்ச் 7-ம் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம்” என தெரிவித்திருக்கிறார். இதனால், 4 மாதங்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்குமா இல்லையா என்பது பற்றி எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 123-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்