Breaking News Live: திரிபுராவின் முதல்வராகிறாரா மாணிக் சஹா?
Breaking News Live Updates: தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், குற்றங்கள் பற்றி செய்திகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
Background
டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திரிபுராவின் முதல்வரானார் மாணிக் சஹா
திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பில் உள்ள மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தரசில் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
20ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
உதகையில் நடைபெறும் 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதால் 20ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என்றும், 12ம் வகுப்பு உட்பட அனைத்து கல்வி தேர்வுகளும் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் வரும் 18 ம் தேதி முதல் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள்..!
சென்னையில் செப்டம்பர் 26 ம் தேதி முதல் அக்டோபர் 2 ம் தேதி அவரை WTA உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற இருக்கிறது.